Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரியவம்சம் "இட்லி உப்புமா” ஞாபகம் இருக்கா.. அதற்கு இப்படி ஒரு கதை இருக்கா? மனம் திறந்த தேவயானி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தேவையானி தன்னுடைய திரைப்பட வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் சூரியவம்சம் திரைப்படத்தில் அனுபவங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "இட்லி உப்புமா" இப்ப வரைக்கும் பலரால் மறக்க முடியாது. அந்த சுவாரசியமான கதை பற்றி பகிர்ந்திருக்கிறார்.

90ஸ் ஃபேவரிட் நடிகைகளில் ஒருவராக இப்ப வரைக்கும் இடம்பெற்று கொண்டிருக்கும் நடிகை தேவயானி யாருக்கும் தெரியாது என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு முக்கிய கதாநாயகியாக பல வருடங்களாக நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இப்போது சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை தேவயானி தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Actress Devayani explains about the story of Idli Uppuma appeared in the movie Sooryavamsam

நடிகை தேவயானி விஜய், அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களோடு கதாநாயகியாக நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அவர் நடித்த ஹிட் திரைப்படங்களின் வரிசையில் இருக்கும் பாடல்கள் இப்ப வரைக்கும் பலருடைய காலர் டியூனாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரு திரைப்படம் தான் சூரியவம்சம். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேவயானிக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்திருந்தது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் ஜோடியாக இவர் நடித்திருப்பார். காதலித்த ஒரு பெண்ணிற்காக வீட்டில் தன்னுடைய தந்தையின் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டு, அந்தக் காதலித்த பெண் செய்யும் அவமானங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆணின் வாழ்க்கையில் அவரை உண்மையாக காதலித்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய நந்தினி கேரக்டரை யாராலும் மறக்க முடியாது. ஒரே பாட்டில் ஹிட்டான ஜோடியாக இப்ப வரைக்கும் இவர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

நடிகை தேவயானி அப்போது 90ஸ் கிட்ஸ்களின் ரோல் மாடல். காதல் திருமணம் செய்து கொண்டால் நந்தினி, சின்ராசு போல வாழ வேண்டும் என்று தான் பலரும் மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு அந்த காலத்தில் வாழ்க்கையை தொடங்கியவர்களும் உண்டு. அந்த வகையில் சின்ராசுவும் நந்தினியும் எப்படி ஹிட்டானர்களோ அதுபோல நந்தினி சமைத்த இட்லி உப்புமா வேற லெவலில் பிரபலமானது.

அதுவரைக்கும் உப்புமாக்களில் பல வகை இருப்பது பலருக்கும் அந்த காலத்தில் தெரியாமல் தான் இருந்திருக்கும். அந்த நேரத்தில் மீந்து போன இட்லியை வைத்து உப்புமா செய்து பலரையும் வியக்க வைத்திருந்தார். அது திரைப்படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலுமே இந்த சீனை பார்த்து தேவயானி வியந்து போனாராம். அப்போது தேவயானிக்கு இப்படி ஒரு உப்புமா செய்ய முடியும் என்று தெரியாதாம். வீட்டில் ரவா உப்புமா அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறாராம். ஆனால் இட்லியில் உப்புமா என்று சொன்னதும் முதலில் அவரே ஆச்சரியப்பட்டாராம்.

Actress Devayani explains about the story of Idli Uppuma appeared in the movie Sooryavamsam

கதை சொல்லும்போது கூட இப்படி கதை வைக்கிறாங்களே இது செட் ஆகுமா என்று யோசித்தாராம். ஆனால் திரைப்படம் வெளியான பிறகு இந்த சீன் பலருடைய பாராட்டை பெற்று வருவதை பார்த்து இவரே வியந்து போயிருக்கிறாராம். நிஜத்தில் இவருக்கு அப்போது சமைக்க தெரியாமல் இருந்தாலும் அந்த திரைப்படத்தில் இவருடைய சமையல் இப்ப வரைக்கும் பலர் வீட்டில் எதிரொளித்து கொண்டிருக்கிறது.

தான் வெளியே செல்லும்போது கூட பலர் இந்த உப்புமா பத்தி கேட்கும் போது எனக்கு சிரிப்பாக வரும் என்று தேவயானி கூறி இருக்கிறார். அதோடு வெளியே செல்லும் இடங்களில் சூரியவம்சம் திரைப்படத்தின் பாடல்களில் பலருடைய மொபைல் ரிங் டோனாக இருப்பதை பார்த்து எனக்கே வியப்பாக இருக்கும். இப்ப கூட அந்த பாடல்களை ரசிக்கிறார்களே என்று நான் நினைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மணிமேகலை கூட தன்னுடைய மோட்டிவேஷன் திரைப்பட பாடல் மற்றும் படம் என்றால் சூரிய வம்சம் திரைப்படம் தான் என்று அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து வருவார். இது தேவயானிக்கு தெரியாது போல.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+