மாரி சீரியலில் நடிக்க காரணம் இதுதான்..இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல.. மனம் திறந்த நடிகை தேவயானி
சென்னை: நடிகை தேவயானி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மாரி சீரியலில் நடித்து வருவது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
முன்னணி நடிகையாக நடித்து வந்த நிலையில் எதற்காக இந்த சீரியலில் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய மாரி சீரியல் அனுபவங்கள் மற்றும் எதற்காக இந்த சீரியலில் நடித்திருக்கிறேன் என்று பல தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.

90ஸ் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர்தான் தேவயானி. இவர் நடித்த பல ஹிட் திரைப்படங்கள் இப்ப வரைக்கும் 2k கிட்ஸ்களின் மனதையும் கவர்ந்து வருகிறது. இவர் நடித்த பல திரைப்படங்களின் பாடல்கள் இப்பவும் பலருடைய ஃபோன்களில் ரிங்டோனாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த தேவயானி வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் இப்போது சின்னத்திரையில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
சூரியவம்சம், காதல் கோட்டை, ஃப்ரண்ட்ஸ் போன்ற எண்ணற்ற ஹிட் படங்களில் நடித்திருந்த நடிகை தேவயானிக்கு சின்னத்திரையில் பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது கோலங்கள் சீரியல்கள் தான். இந்த சீரியலில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி ரசிகர்களின் மனதில் அபியாகவே 5 வருடங்களாக இடம் பிடித்துக் கொண்டார். இப்போதும் அதிகமான ரசிகர்கள் இவரை அபி என்று அழைத்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தன்னுடைய நடிப்பால் முத்திரையை பதித்த தேவயானி சில வருடங்கள் சின்னத்திரைக்கும் பிரேக் விட்டுவிட்டு சமீபத்தில் ஜீ தமிழில் முடிவடைந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியல் மூலமாக மீண்டும் சீரியலில் ரீஎண்டரி கொடுத்திருந்தார். சமீபத்தில் அந்த சீரியல் முடிவடைந்த பிறகு இப்போது மீண்டும் அதே ஜீ தமிழில் மாரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது வரைக்கும் கதாநாயகியாகவே நடித்து வந்த தேவயானி இந்த சீரியலில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தான் நடித்த கோலங்கள் சீரியலில் பணிபுரிந்த அதே இயக்குனர் தான் இந்த மாரி சீரியலிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலின் கதையை என்னிடம் சொல்லும் போது நான் வியந்து போய் விட்டேன். அந்த அளவிற்கு இந்த சீரியல் எனக்கு பிடித்து விட்டது.

காரணம் மாரி சீரியலில் முத்து பேச்சி என்னும் கேரக்டரில் நான் நடிக்கப் போகிறேன் என்று சொன்னார்கள். முத்துப்பேச்சி என்ற பெயரை சொன்னதுமே எனக்கு அந்த அளவிற்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலுக்காக நான் சிலம்பம் போன்றவற்றையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இது எல்லாம் எனக்கு ரொம்பவே பிடித்த வேலை. அதை நான் கற்றுக் கொண்டு இதில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனால் நான் இதுல விரும்பி நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த சீரியலை நான் நடித்த பிறகு அதிகமான ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அது எனக்கு மேலும் என்னுடைய வேலையை சிறப்பாக செய்வதற்கு ஒரு உந்துகோலாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
-
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications