மீண்டும் சீரியலில் அறிமுகமாகும் தேவயானி..என்ன ஆச்சு இவருக்கு..? இப்படி ஒரு கேரக்டரா..?
சென்னை: நடிகை தேவயானி மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கதாநாயகியாக நடித்து வந்த தேவயாணி ஜீ தமிழில் மாறி சீரியலில் கெஸ்ட் ரோலில் அறிமுகமாகிறார்.
நடிகை தேவயானி பற்றிய செய்திகள் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவர் தான் தேவயானி. இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட் ஆகி இப்ப வரைக்கும் பலருடைய ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. இவருடைய நடிப்பில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
நடிகை தேவயானி நடித்த எவர்கிரீன் திரைப்படங்களும் அவருடைய நடிப்பும் பலராலும் இப்போதும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக சூரிய வம்சம், காதல் கோட்டை போன்ற திரைப்படங்களாக இருந்தாலும் சரி நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்ததாக இருந்தாலும் சரி இவருடைய நடிப்பு மற்றும் கியூட்டான எக்ஸ்பிரஷன் எப்போதுமே மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இவர் நடித்த கோலங்கள் சீரியல் இப்ப வரைக்கும் பலரும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜீ தமிழில் முடிவடைந்த புது புது அர்த்தங்கள் எனும் சீரியலிலும் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த தேவயானி மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் ஜீ தமிழில் ஹிட்டான சீரியலான மாரி சீரியலில் தான் முக்கியமான கேரக்டராக தேவயானி அறிமுகமாக இருக்கிறாராம்.
அடுத்த வாரத்தில் இருந்து மாரி சீரியலில் பல மாற்றங்கள் வர இருக்கிறது. ஜீ தமிழில் புது சீரியல்கள் பல வர இருக்கும் நிலையில். தற்போது ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் இனி 45 நிமிடங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் கதையை விரிவு படுத்துவதற்காகவும் விறுவிறுப்பு ஏற்படுத்துவதற்காகவும் கடவுள் வடிவில் தேவயானி வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவோடு தேவயானி எடுத்த புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. அதனால் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவிற்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராக தேவயானி வரப்போகிறார் என்று செய்திகளும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போ வரைக்கும் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் இனி வரலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் என்ன ஆச்சு தேவயானிக்கு ஏன் இப்படி டெஸ்ட் ரோலாகவும், சைடு கேரக்டரிலும் நடிக்கிறார் என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து இருக்கிறது. தேவயானி முக்கியமான கேரக்டரில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications