ராஜகுமாரை காதலிக்க காரணம்..?அப்போ இது தெரியாது.. முதல்முறையாக மனம் திறந்த நடிகை தேவயானி
சென்னை: நடிகை தேவயானி தன்னுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
முதல்முறையாக தன்னுடைய கணவரை எதற்காக காதலித்தேன் என்ற காரணத்தை தேவயானி கூறியிருக்கிறார்.
காதல் திருமணம் செய்த தேவயானி வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்க்கலாம்,

வெள்ளி திரையிலும், சின்னத்திரையிலும் பாப்புலர் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தேவயானியை தெரியாதவர்களே இருக்க முடியாது. இவருடைய பல ஹிட் திரைப்படங்கள் இப்போ உள்ள ரசிகர்கள் கூட முணுமுணுக்கும் பாடல்கள் இடம் பிடித்தது தான். அதனாலையே நடிகை தேவயானி 90 கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் 2கே கிட்ஸ்களுக்கும் பரிச்சயம் ஆனவர்.
தமிழில் அறிமுகமாகி கொடிகட்டி பறந்து கொண்டிருந்த நடிகைகளில் ஒருவராக இருந்த தேவயானி சினிமாவில் உச்சத்தில் இருந்த நிலையில் திடீரென்று இயக்குனர் ராஜகுமார் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு தேவயானிக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் சீரியலின் பக்கம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதல் முதலாக கோலங்கள் என்ற சீரியலில் நடிக்க தொடங்கி அந்த சீரியலில் பல பெண்களுக்கு முன்னோடியாக நடித்த இருப்பார். அதனாலயே சின்னத்திரையில் இப்போ வரைக்கும் இந்த சீரியல் பாராட்டப்பட்டு வருகிறது.
நடிகை தேவயானி அவருடைய கணவர் ராஜகுமார் காதலியாக பார்ப்பதற்கு முன்பு அவருடைய ஒரு கதாநாயகியாக தான் பார்த்திருக்கிறார். இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய படம் தான் நீ வருவாய் என இந்த திரைப்படத்தில் தேவயானி, பார்த்திபன், அஜித் என மூவரோடு சேர்ந்து நடிப்பில் வெற்றியும் பெற்றிருந்தது. அந்த திரைப்படத்தை வைத்து தான் ராஜகுமாரன் மீது தேவையானி காதல் வந்திருக்கிறது.
அப்போது இதை சூசகமாக இயக்குனர் தெரிந்து கொண்டிருப்பாரோ என்னவோ அதனாலேயே இவர் தேவயானியையும் விக்ரமையும் வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை அடுத்ததாக இயக்கியிருக்கிறார். அந்த படப்பிடிப்பில் தான் ராஜகுமாரின் அன்பு அமைதி உழைப்பு பார்த்து தான் தேவயானிக்கு ராஜகுமார் மீது காதல் ஏற்பட்டதாம்.

அதுபோல தேவயானி கொஞ்சலான பேச்சு, இளகிய மனமும் ராஜகுமாருக்கு பிடித்து போக தேவயானி நம் வாழ்க்கை துணையாக வந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்துதான் இரு பக்கமும் காதல் மலர்ந்திருக்கிறது. ராஜகுமாரின் மீது இருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணம். என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் கடைசி வரைக்கும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய காதல் கதையை குறித்து தேவயானி பேசிய வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் என்ற போது அதிகமாக அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கூட இவர்களுடைய இத்தனை வருட காதல் திருமண வாழ்க்கையை பார்த்து வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications