இயக்குனராக மாறிய தேவயானி.. உழைப்பிற்கு கிடைத்த விருது.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை தேவயானி முதல் முதலாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கி, தயாரித்த 'கைக்குட்டை ராணி' ஷார்ட் பிலிம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்று சாதனை படைத்திருக்கிறது.
நடிகை தேவயானி 90s காலகட்டத்தில் பல சினிமாக்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்போ வரைக்கும் சீரியல், சினிமா என்று நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் முதல் முறையாக கைகுட்டை ராணி என்ற ஷார்ட் பிலிம் இயக்கி, தயாரித்து இருக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையில் லெனின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள கைக்குட்டை ராணி குழந்தைகளின் உணர்வுகளை பேசும் படமாக அமைந்துள்ளது. தேவயானி சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளில் பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் முதல் முறையாக இவர் தயாரித்த குறும்படமான கைக்குட்டை ராணி குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

டி பிலிம்ஸ் பானரில் தேவயானி தயாரித்து எழுதி இயக்கியுள்ள கைக்குட்டை ராணி திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க எடிட்டர் லெனின் படத்தொகுப்பை கையாண்டு இருக்கிறார். சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்து, தந்தையும் வெளியூரில் பணியாற்றும் நிலையில் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

17 வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் இந்த குறும்படம் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படம் என்று தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதோடு தேவயானி மற்றும் குழுவினரையும் வெகுவாக பாராட்டி இருந்தனர். இது பற்றி தேவயானி கூறுகையில் எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும் முதல் முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இதில் பங்காற்றிய மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவை போல மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார். அதுபோல கைகுட்டை ராணி குறும்படத்தில் நிஹாரிகா, விகே மற்றும் நவீன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications