காலக்கொடுமை.. 10 நாளைக்கு முன்னாடி தானே! பயமா இருக்கு.. டேனியல் பாலாஜி குறித்து தேவி பிரியா எமோஷனல்
சென்னை: "காக்க காக்க", "வேட்டையாடு விளையாடு"," பைரவா" போன்ற திரைப்படங்களின் மூலம் பெரிய அளவில் பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த செய்தி ஒட்டுமொத்ததிரை உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். இந்த நிலையில் டேனியல் பாலாஜி குறித்து பல நடிகர்கள், நடிகைகள் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் டேனியல் பாலாஜியின் மறைவு குறித்து சீரியல் நடிகை தேவி பிரியா உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் எப்போ என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இது காலக்கொடுமையா? என்று புரியவில்லை.. நேற்று வரைக்கும் நல்லா இருந்தவர்கள் திடீரென்று இல்லாமல் போய்விடுகிறார்கள். டேனியல் பாலாஜி எனக்கு நடிப்பு ரீதியா ரொம்பவே பிடிக்கும். நான் அவரிடம் நேரம் கிடைக்கும் போது பேசி இருக்கிறேன். அவர் இன்று இல்லை என்பதை நினைக்கும் போதே பயமாக இருக்கிறது.

அதிலும் டேனியல் தன்னுடைய நடிப்பால் எல்லாரையும் மிரட்டி இருக்கிறார். நான் சொன்னா நீங்க எல்லாரும் நம்புவீங்களா என்று தெரியல! நான் கடந்த பத்து நாளைக்கு முன்பு டேனியல் பாலாஜி படத்தை பார்த்தேன். அதாவது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் டேனியலில் நடிப்பை பார்த்து நான் மெய் மறந்து போய் இருந்தேன். அப்போ கூட நான் அடுத்த ஜென்மத்தில் ஒரு ஆணா பிறக்கணும்.
அப்போதான் இந்த மாதிரி எல்லாம் கேரக்டர் பண்ண முடியும் என்று என் மனசுக்குள்ளேயே நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம் திடீரென்று எனக்கு அவர்கிட்ட பேசணும் போல இருந்துச்சு. உடனே என் போனை எடுத்து அவருடைய நம்பரை செக் பண்ணி பார்த்தேன். ஆனால் என்ன ஆச்சுன்னு தெரியல அவருடைய போன் நம்பர் டெலிட் ஆகி இருக்கிறது.
அவர் நம்பர் எனக்கு கிடைக்கல. பிறகு பேஸ்புக் மூலமாக பேசலாம்னு பார்த்தேன். ஆனால் இப்போ அவர் கொஞ்ச நாளாவே பேஸ்புக்கில் ஆக்டிவா இல்ல. அது போல நேற்று கூட டிவியில் டேனியல் படம் போட்டு இருந்தாங்க. ஆனா இன்னைக்கு அவர் இல்லை என்பதை என்னால ஏற்றுக்கொள்ள முடியல. நான் அவரோடு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்களில் ஒருவர்தான்.
பொதுவா ஒரு நடிகர் அடுத்த நடிகரின் திறமையை பாராட்டணும். அப்படி பார்த்தால் எனக்கு அவருடைய நடிப்பு பிரமிப்பையை ஏற்படுத்தும். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ராகவன் உடன் அகிலனாக டேனியல் நடித்தது என்னால் மறக்க முடியாது. அதுபோல யாருக்கு எப்போ முடிவு என்று தெரியாத வாழ்க்கையில் தான் நாம் வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதனால இருக்கிற வாழ்க்கையில் நல்லபடியா வாழனும். அது போல உடல் நலத்தை எல்லோரும் நல்லபடியா செக் பண்ணிக்கோங்க என்று அந்த வீடியோவில் சீரியல் நடிகை தேவி பிரியா பேசியிருக்கிறார்.
ஏற்கனவே சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு இப்போது அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து டப்பிங் பேசப்போன இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அதை போல மனோபாலா, மயில்சாமி, போண்டாமணி, ஆர் எஸ் எஸ் சிவாஜி என பலர் மரணம் அடைந்திருக்கின்றனர். கடந்த வாரத்தில் கூட லொள்ளு சபா சேஷு காலமானார். அதைத் தொடர்ந்து இப்போது டேனியல் பாலாஜியின் மறைவும் பலரையும் சோகத்தில் அழுத்தி இருக்கிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications