“தொட்டா சிணுங்கி” மாடர்ன் டிரஸ்.. ஷகிலா பயில்வானிடம் அப்படி கேட்டாங்களே! தேவயானி சொன்னதை பாருங்க
சென்னை: நடிகை ஷகிலா சில தினங்களுக்கு முன்பு பயில்வானை பேட்டி எடுக்கும் போது நீங்கள் தேவயானி மட்டும் மாடர்ன் டிரஸ் போடவில்லை என்று எப்படி சொல்லலாம்? அவர் “தொட்டாசிணுங்கி” திரைப்படத்தில் போட்ட மார்டன் டிரஸ்ஸை நீங்க பார்த்தீங்களா? என்று கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தேவயானி ஏற்கனவே தொட்டாசிணுங்கி படத்தில் தான் மார்டன் டிரஸ் போட்டது குறித்து விளக்கம் கொடுத்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த வகையில் நடிகை தேவயானி பல முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்து சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் அதிலும் நடித்து இருக்கிறார். ஆனால் தான் நடித்த அதிகமான திரைப்படங்களில் குடும்ப பாங்கான கேரக்டரில் தான் தேவயானி நடித்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.

ஹோம்லியான நடிகைகள் லிஸ்டில் தேவயானியின் பெயரும் இருக்கிறது. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் தேவயானி நடிகை என்பதை தாண்டியும் மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆகவும் இருந்து வருகிறார். ஆனால் அவர் ஆரம்பத்தில் “தொட்டாசிணுங்கி” “சிவசக்தி” போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருக்கிறார்.
அதற்குப் பிறகு தேவயானி காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக குடும்ப பாங்கான திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஷகிலா பயில்வான் ரங்கநாதன் பேசிக் கொண்டிருக்கையில் நீங்கள் உங்களுடைய youtube சேனலில் தேவயானி கவர்ச்சிக்காக நடித்தது கிடையாது என்று சொல்லி இருக்கிறீங்க.
தேவயானி கவர்ச்சியாக நடித்ததை நீங்கள் பார்க்கவில்லையா? அவர் தொட்டாசிணுங்கி என்ற திரைப்படத்தில் கவர்ச்சி உடை அணிந்து நடித்திருக்கிறார். நீச்சல் உடையில் குளித்த காட்சிகள் எல்லாம் நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேள்வி எழுப்ப அதற்கு பயில்வான் ரங்கநாதன் தேவயானி ஆரம்பத்தில் அப்படி நடித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு கவர்ச்சியாக நடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.
அதற்கு ஷகிலா அது எப்படி நீங்க சொல்ல முடியும்? ஆரம்பத்தில் நடிச்சாங்க பிறகு நடிக்கல ஆனா அவங்க கவர்ச்சியாக நடிக்கல என்று நீங்க சொல்லக்கூடாது. நீங்க பல நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை உங்களுக்கு வியூஸ் வரவேண்டும் வருமானம் வர வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று ஷகிலா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இப்படியான நிலையில் இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை தேவயானி தான் தொட்டாசிணுங்கி திரைப்படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசிய வீடியோவை இப்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவில் தேவயானி, ஆரம்பத்தில் தொட்டா சிணுங்கி என்ற திரைப்படத்தில் மார்டன் உடையில் நடித்திருந்தேன்.
அந்த படத்தை இப்போது பார்த்தாலும் எனக்கே கஷ்டமாக இருக்கிறது. அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு விருப்பமே கிடையாது. ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு நான் இந்த மாதிரி இனி நடிக்கவே மாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஒரு சில நடிகைகள் மார்டன் உடை போடுவதை பார்த்திருக்கிறேன். அது அவர்களுக்கு அழகாக இருக்கும். ஆனால் எனக்கு மார்டன் உடை செட்டாகாது. எனக்கு எப்போதும் புடவை மற்றும் சுடிதார் தான் செட் ஆகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications