Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன் பிறந்தநாளில் தம்பி நகுல் குடும்பத்தை சந்தித்த தேவயானி.. போட்டோவில் இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தேவயானியின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி அவர் தன்னுடைய குடும்பத்தோடு தன்னுடைய தம்பி நகுல் குடும்பத்தை சந்தித்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை தேவயானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதை பற்றி பார்க்கலாம்.

சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று அடுத்தடுத்து பிஸியாக கலக்கிக் கொண்டிருக்கும் தேவயானி தன்னுடைய சொந்த குடும்பத்தையும் அழகாக கவனித்து வருகிறார். தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

Television Tamil Cinema Actress Devayani

அதில் மூத்த மகள் இனியா தேவயாணியை போலவே நடிக்க வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். அதுபோல பாடலிலும் கெட்டிக்காரியாக இருந்து வரும் இனியா ஏ.ஆர் ரகுமான் இசை பள்ளியில் இசையை முறைப்படி படித்திருக்கிறாராம் அதோடு குங்ஃபூ, கராத்தே, சிலம்பம் என்று தற்காப்புக்களில் டான்ஸ், ஆக்டிங் என்று நடிப்புக்கு சார்ந்த எல்லா விஷயங்களையும் இனியா கற்றுக் கொண்டிருக்கிறார்.

இனியா கல்லூரி படிப்பை முடித்ததை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை தேவயானி தன் மகள்களோடு தன்னுடைய பிறந்த நாளில் தன் தம்பி வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு நகுல் அவருடைய குழந்தைகள் மற்றும் மனைவியோடு தேவயானி குடும்பமும் புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர்.

அந்தப் புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் தேவயானி வீட்டில் அடுத்த கதாநாயகி ரெடியாகிவிட்டார்கள் போல, அதிலும் தேவயானியின் மகள்கள் இரண்டு பேருமே தேவயானியை போலவே இருக்கிறார்களே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே தேவயானி ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அவருடைய தம்பி நகலுக்கு பிடிக்கவில்லை என்று செய்தி பரவி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நகுல் ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருந்தார்.

அதில் நகுல் பேசுகையில், எனக்கு என்னுடைய மாமா ராஜகுமாரன் மீது எந்த வருத்தமும் கிடையாது. அவங்க திருமணம் செய்து கொண்ட ஆரம்பத்தில் எனக்கு வருத்தம் இருந்தது. அந்த நேரத்தில் நானும் சின்ன பையன் அப்போ எது சரி தவறு என்று தெரியாது. அதற்கு பிறகு அவர் அக்காவை பார்த்து கொள்கிற விதம் பிறகு அக்காவுக்கும் மாமாவுக்கும் இருக்கிற அன்பு பார்க்கும்போது என்னுடைய மனசு மாறிடுச்சு என்று கூறியிருந்தார்.

ஆனாலும் இப்போது தேவயானி தன்னுடைய மகள்கள் உடன் தம்பி நகுலை சந்தித்திருக்கும் நிலையில் ராஜகுமாரன் இப்போதும் தேவயானி வீட்டுக்கு வரவில்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு ரசிகர்கள், எது எப்படி இருந்தாலும் எல்லா வீட்டிற்குள்ளும் பிரச்சினைகள் இருக்க தான் செய்யும், அதுபோல தேவையான வீட்டிலும் பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

ஆனால் தேவயானி மற்றும் ராஜகுமாரன் தங்களுடைய காதல் வாழ்க்கையில் சந்தோசமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தேவையில்லாத நெகட்டிவ் கமெண்ட்கள் வேண்டாம் என்று தேவயானியின் ரசிகர்கள் வேண்டுதல் விடுத்தும் வருகிறார்கள். எது எப்படியோ இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவது போலவே, அவரோடு ஜோடியாக நடித்த தேவயானியின் பிறந்த நாளும் அவருடைய குடும்பத்தாரால் கொண்டாடப்படுகிறது. அதுபோல ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+