+2 தேர்வில் நடிகை தேவயானியின் மகள் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருக்கிறாரா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: இந்த ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வின் முடிவு நேற்று வெளியானது.
அதில் நடிகை தேவயானியின் மகளும் இந்த வருடம் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார்.
தற்போது அவர் வாங்கிய மதிப்பெண்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர்தான் தேவயானி. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை தேவயானி கன்னடத்தை சேர்ந்த ஜெயதேவுக்கும் மலையாளத்தை சேர்ந்த லட்சுமிக்கும் 1974 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் சுஷ்மா தான். சினிமாவுக்காக தான் இவர் தேவயானி என்று பெயரை மாற்றி இருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்கள் நடித்த தேவயானி இந்தி மற்றும் வங்காள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
வெள்ளிதிரையில் இவர் நடித்து ஹிட்டடித்த திரைப்படங்கள் அதிகமாக இருந்தாலும் சின்ன திரையில் இவர் நடித்து ஏழு வருடங்களாக ரசிகர்களை கவர்ந்த கோலங்கள் சீரியலை இப்ப வரைக்கும் யாராலும் மறந்து விட முடியாது. தேவயானி என்ற பெயருக்கு பிறகு இவருக்கு அபி என்ற பெயர் அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று சின்னத்திரை ரசிகர்கள் பலர இப்போதும் இவரை அபி என்று தான் கூப்பிட்டு வருகின்றனர்.

நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இவருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் தேவயானியின் மூத்த மகள் இந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதி இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் தேவயானியின் மூத்த மகள் பெற்ற மதிப்பெண்கள் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இவர் 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 498 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications