தேவயானியின் மகள் இந்த டாப் நடிகரோடு நடிக்க போகிறாரா? அதற்காக இவ்வளவு ரிஸ்க்கா? ராஜகுமாரன் பளிச்
சென்னை: நடிகை தேவயானியின் இரண்டாவது மகள் பிரியங்கா நடிகர் ஷாருக்கானுடன் நடிக்க வேண்டும் என்று எட்டு கிலோ உடல் எடை குறைத்து இருப்பதாக தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
காதல் திருமணம்: சினிமா மற்றும் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதியதல்ல. பலர் திருமணம் செய்திருந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் தொடர்ச்சியாக திருமண வாழ்க்கையில் அதே காதலோடு பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் நடிகை தேவயானி மற்றும் இயக்குனர் ராஜகுமாரன் தேவயானி முன்னணி நடிகையாக இருக்கும் போது இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

தமிழக அரசு விருது: இயக்குனர் ராஜகுமாரன் ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதிலும் நடிகை தேவயானி நடித்த நீ வருவாய் என திரைப்படத்திலும் இயக்குனராக ராஜகுமாரன் பணியாற்றி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்காக ராஜகுமாரனுக்கு சிறந்த கதை ஆசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது கிடைத்திருக்கிறது.
முதல் படத்தில் காதல்: அதுபோல அந்த திரைப்படத்திலேயே ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்திலும் நடிகை தேவயானி தான் கதாநாயகியாக நடித்திருந்தார். பிறகு 2001 ஆம் ஆண்டு திருத்தணி முருகன் கோவிலில் வைத்து இரண்டு வீட்டின் எதிர்ப்பையும் மீறி தேவயானி மற்றும் ராஜகுமாரன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தேவயானியின் மூத்த மகள்: இந்த தம்பதிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் தேவயானியை போலவே நடிகையாக வேண்டும் என்று நடிப்பு பயிற்சிகளை முடித்து இருக்கிறாராம். அதுபோல அவருடைய குரல் வளமும் இனிமையாக இருப்பதால் முறைப்படி பாடலையும் கற்று இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய தந்தையை போலவே திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதும் எனக்கு ஆசை என்று தெரிவித்திருக்கிறார்.
உடல் எடை குறைப்பு: அதுபோல தேவயானியின் இரண்டாவது மகள் பிரியங்கா தீவிரமான ஷாருக்கானின் ரசிகையாம் அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தீவிரமான உடற்பயிற்சி செய்து 8 கிலோ உடல் எடை குறைத்து இருக்கிறார் என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜகுமாரன் பேசி இருக்கிறார்.

ஷாருக்கானின் ரசிகை: ஷாருக்கான் 80ஸ் காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சினிமா மட்டுமல்லாமல் சின்னதிரையையும் விட்டு வைக்காமல் தொகுப்பாளராகவும் இருந்து வரும் நிலையில் அவரின் தீவிர ரசிகையாக தேவயானியின் இரண்டாவது மகள் பிரியங்கா இருக்கும் நிலையில் தேவயானி அது குறித்து பேசுகையில், என்னுடைய மகள் சின்ன வயதிலிருந்து ஷாருக்கான் படம் தான் ரொம்ப விரும்பி பார்ப்பாங்க. அவங்க சாப்பாடு ஊட்டும் போது கூட ஷாருக்கான் படத்தை போட்டுத்தான் ஊட்டி இருக்கிறேன்.
தீவிர ரசிகை: இப்போதும் ஷாருக்கான் படம் வெளியானதுமே அவருடைய தோழிகளோடு படம் பார்க்க கிளம்பி விடுகிறார். ஷாருக்கான் தான் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். எப்படியாவது ஒரு படத்தில் ஷாருக்கான் ஒரு நடித்து விடவேண்டும் என்று ஆசைப்படுறாங்க, அந்த பேட்டியில் தேவயானி தன்னுடைய மகள் குறித்து பேசி இருக்கிறார். 58 வயதான ஷாருக்கான் உடன் ஜோடியாக தேவயானி மகள் நடிக்க போகிறாரா? இல்லையா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications