உருவத்தால் அலட்சியம்! என் பொண்ணுக்கு “அந்த” மனவருத்தம்.. திறமை முக்கியம்.. தேவயானியின் கணவர் பளிச்
சென்னை: நடிகை தேவயானியின் கணவரான ராஜகுமாரன் தன்னுடைய மகள் மற்றும் தன்னுடைய குடும்பத்தை பற்றி பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஜெயிப்பதற்கு அழகு மட்டுமல்ல திறமை தான் முக்கியம் என்று தன்னுடைய மகளுக்கு மட்டுமல்லாமல் மன வருத்தத்தில் இருக்கும் பலருக்கும் ராஜகுமாரன் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரன் நீ வருவாய் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் இயக்குனராக தனக்கு என்று ஒரு தனி முத்திரையை பதித்து, பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் நடிகை தேவயானி நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டின் எதிர்ப்பையும் மீறி 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் தன்னுடைய மகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நானும் தேவயானியும் பலருக்கும் பிரபலமாக இருப்பதால் எங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதுபோல எங்கள் பிள்ளைகள் நடிக்க வருவார்களா? என்று பல ரசிகர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அது இன்னும் கொஞ்ச நாளில் நடக்கத்தான் போகிறது. என்னுடைய மகளுக்கு நடிப்பு திறமை எல்லாமே இருக்கிறது. அவள் கராத்தே, குங்ஃபூ, கத்தி சண்டை, சுருள் சண்டை, டான்ஸ், பாட்டு என்று முறைப்படி எல்லாவற்றையும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவளுக்கு ஒரு சின்ன தயக்கம் இருக்கிறது.. அவள் என்னை போலவே குட்டையாக இருப்பதால் நாம இப்படி குட்டியாக இருக்கிறோமே நம்மால் நடிக்க முடியுமா? அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கம் இருக்கிறது.
ஆனால் அந்த தயக்கம் தேவை இல்லாதது என்பது என்னுடைய கருத்து. சினிமா துறையில் குட்டியாகவும் கருப்பாகவும் இருந்தாலும் சாதித்தவர்கள் ஏராளமானவர்கள். அதற்கு உதாரணமாக ரேவதி, சரிதா போன்ற பலரை சொல்லிக் கொண்டே போகலாம். என்னுடைய மகள் என்னைப்போல மாநிறமாகத்தான் இருக்கிறார். அதை நினைத்து அவள் அதிகமாக கவலைப்படுவாள்
ஆனால் நான் சொல்வது அழகை விடவும் திறமை இருந்தால் ஜெயித்து விடலாம் என்பதுதான். யோகி பாபு என்னை விடவும் அழகாவா இருக்கிறாரு? ஆனால் யோகி பாபு சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவருக்கு திறமை இருக்கிறது. என்னை விட அவருக்கு அதிகமான திறமை இருப்பதால் அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடிகிறது.
சினிமாவில் மட்டுமல்ல, எந்த இடத்திலும் அழகு இல்லை என்று நாமாக ஒதுங்கி விட்டால் நம்முடைய திறமையை நாமே மதிக்கவில்லை என்று தான் அர்த்தம் என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications