பாக்கியலட்சுமி சீரியல் ஜெனியா இது? மார்டன் உடையில் கலக்குறாரே! மிரர் செல்பியோடு ஸ்பெஷல் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து வரும் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் பலருடைய மனம் கவர்ந்த ஜெனி இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் ஜெனிக்கென்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எப்போதும் பாக்யாவிற்கு உறுதுணையாக இருக்கும் மருமகளை பார்த்ததும் இப்படி ஒரு மருமகள் நமக்கு கிடைக்காதா? என்று ஏங்கி கமாண்ட் கொடுப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதுபோல திவ்யா கணேஷ் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் மகாநதி சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
அதுபோல ஏற்கனவே செல்லம்மா சீரியலிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். விஜய் டிவியில் தற்போதைக்கு பாக்கியலட்சுமி சீரியலில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சன் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அன்னம் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த இரண்டு சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிசியான நேரத்திலும் சமூக வலைத்தளத்திலும் அவ்வப்போது போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அடிக்கடி வெளிநாடு மற்றும் வெளி இடங்களுக்கு சுற்றுலா செல்லும் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் லைக்கை அள்ளிக் கொண்டு இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தனக்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதால் தான் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறேன் என்று அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதுதான் அவர் மகாநதி சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

அதைத் தொடர்ந்து தான் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு வந்து விட்டேன் என்று சில மாதங்களுக்கு முன்பு விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தில் கருப்பு நிறத்தில் ஸ்லீவ் லெஸ் உடை அணிந்து மிரர் செல்பி புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதை பார்த்ததும் பாக்கியலட்சுமி புடவையில் பவ்யமாக வரும் நம்ம ஜெனியா இது? என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அதோடு திவ்யாவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications