ஆண் பைலட் உடன் அந்த மாதிரி..பரிதாபமாக போன உயிர்.. அர்ணவ்க்கு எதிராக திவ்யா வெளியிட்ட ஆதாரம்
சென்னை: சீரியல் நடிகர் அர்ணவ்க்கு எதிராக திவ்யா பல ரகசியங்களை உடைத்திருக்கிறார்.
அர்ணவால் பாதிக்கப்பட்ட ஆண் பைலட் ஒருவர் தற்கொலை செய்திருப்பதாக திவ்யா ஆதாரம் வெளியிட்டு இருக்கிறார்.
ஆண் பைலட்டையும் அர்ணவ் காதலிப்பதாக பண மோசடி செய்ததாக திவ்யா கூறி இருக்கிறார்.
சின்னத்திரை தம்பதிகளான அர்ணவ் மற்றும் திவ்யா குடும்ப பிரச்சினை சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆறு வருடங்களாக காதலித்து பிறகு திருமணம் செய்த திவ்யாவிற்க்கு அதற்குப் பிறகுதான் அர்ணவ் பற்றி பல ரகசியங்கள் தெரிந்து கருத்து வேறுபாடல் இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் திவ்யாவிற்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. கை குழந்தையோடு சூட்டிங்கில் கலந்து கொண்டு அவர் செவ்வந்தி சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரபல செய்தி சேனல் ஒன்றில் தன் கை குழந்தையோடு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் அர்ணவ் பற்றி பல திடுக்கிடும் ரகசியங்கள் உடைத்து அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு வாக்கில் ஜஸ்டின் என்கிற நபர் அர்ணவ்க்கு பழக்கம் ஆகியிருக்கிறார். அந்த நபர் எப்படி பழக்கம்னா சத்தி சீரியலில் அர்ணவ் நடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவருக்கு ஒரு ரசிகராக ஜஸ்டின் அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த நபர் ஒரு பைலட் ஆகவும் இருந்திருக்கிறார்.
ஆரம்பத்துல அர்ணவ் அந்த நபரிடம் ஒரு ரசிகர் என்கிற மாதிரி தான் பேசிகிட்டு இருந்திருக்காரு. ஆனா நாட்கள் செல்ல செல்ல அவருடன் நெருங்கி பழகி, எப்படி காதலிக்கும் போது என்கிட்ட பேசினாரோ அந்த மாதிரி எல்லாம் ஜஸ்டின் இடம் சாட் செய்து பேசி இருக்கிறார். செல்லம் உன்ன பாக்கணும், ரொம்ப மிஸ் பண்றேன், உனக்கு பிறகு தான் எனக்கு பொண்டாட்டி பிள்ளைங்கன்னு ஜஸ்டினிடம் உருக்கமாக பேசி ரொம்பவே நம்ப வச்சி இருக்காரு.
ஜஸ்டின் அர்ணவ் பேச்சில மயங்கி அர்ணவ் மீது ரொம்பவே பாசம் வைக்க தொடங்கிட்டாரு. அந்த நேரத்துலதான் ஜஸ்டின் கிட்ட தன்னுடைய வேலையை அர்ணவ் காட்ட தொடங்கி இருக்கிறார். காதல் என்கிற பெயரில் அந்த நபரை ஏமாற்றி அவரிடம் பணம் கறக்க தொடங்கியிருக்கிறார். அதிகமான பணத்தையும் ஜஸ்டின் அர்ணவை நம்பி கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜஸ்டின் அர்ணவிடம் பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார்.
அப்போதான் அர்ணவ் தன்னுடைய சுய ரூபத்தை காட்ட தொடங்கி இருக்கிறார். அதுவரைக்கும் ஜஸ்டினை காதலிக்கிற மாதிரியே பேசி பழகி வந்திருக்கிறார். பணத்தை கேட்டதும் ஜஸ்டின் இடம் பேசுவதையே குறைக்க தொடங்கி இருக்கிறார். அந்த நேரத்துல ஜஸ்டின் சக்தி சீரியல் டீமில் இவருடைய நண்பர்களிடமும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதை ஒரு காரணமாக காட்டி நீ எப்படி என் நண்பர்களிடம் பேசலாம் என்று ஜஸ்டின் இடம் சண்டை போட்டு அவரை பிளாக் செய்து இருக்கிறார்.
இதனால் வெறுத்துப்போன ஜஸ்டின் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து இருக்கிறார். அதையுமே இவருக்கு மெசேஜ் பண்ணி சொல்லிட்டு தான் தற்கொலை பண்ணியிருக்கிறார். இதெல்லாமே எனக்கு அர்ணவோடு பிரச்சனை ஏற்பட்டு அவர் ஜெயிலுக்கு போன பிறகு தான் தெரிய வந்தது. ஜஸ்டின் உடைய உறவினர்கள், நண்பர்கள் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த ஸ்கிரீன் ஷாட் ஆடியோ எல்லாத்தையும் எனக்கு அனுப்பி, நீங்க தப்பிச்சிட்டீங்கன்னு சொல்றாங்க, என்று அந்த பேட்டியில் திவ்யா கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications