இலங்கைப் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி..கழட்டிவிட்ட நடிகர் அர்ணவ்..திவ்யா வெளியிட்ட ஆதாரம்
சென்னை: நடிகை திவ்யா அவருடைய கணவர் அர்ணவ்க்கு எதிராக பல ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் இலங்கை பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கி அதை அபார்ஷன் செய்து, அந்தப் பெண்ணையும் கழட்டி விட்டுட்டாரு என்று திவ்யா கூறியிருக்கிறார்.
அர்ணவ்க்கு எதிராக திவ்யா பல ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துருக்கிறார்.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்து, பிறகு அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை ரசிகர்களை பெறும் அதிர்ச்சியில் ஆகிய இவர்களுடைய குடும்ப பிரச்சனை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் திவ்யா ஆறு வருடங்களாக காதலித்து அர்ணவை திருமணம் செய்து இருந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு அவரை பற்றி பல ரகசியங்கள் தனக்கு தெரிய வந்திருக்கிறது என்று கைக்குழந்தையோடு பிரபல டிவி சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அர்ணவ்க்கு எதிராக பல ஆதாரங்களையும் காட்டி இருக்கிறார்.
அர்ணவால் ஏமாற்றப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவங்க எல்லோரும் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தும், இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பல ரகசியங்களையும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறாங்க, அதை நான் இங்கே மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இனி யாரேனும் அர்ணவால் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று திவ்யா கூறியிருக்கிறார்
மேலும் அவர் கூறுகையில் எனக்கும் அர்ணக்கும் ஏற்பட்ட பிரச்சனை பற்றி நான் இன்டர்வியூவில் பேசி கொண்டு இருந்த நேரத்தில்தான் எனக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பொண்ணு மெசேஜ் பண்ணுச்சு. பிரசன்னா என்கிற என்னுடைய ப்ரண்டையும் அர்ணவ் இப்படித்தான் ஏமாத்திட்டான்னு சொல்லி பிரசன்னாவோடு எடுத்த போட்டோஸ்களையும் எனக்கு அனுப்பி வைத்தாங்க.
நான் அதை பார்த்து அதிர்ச்சி ஆயிட்டேன். பிறகு பல ஸ்கிரீன்ஷாட்களும் எனக்கு அனுப்பி வச்சாங்க.அதோடு அர்ணவ் மற்றும் பிரசன்னா பற்றிய கதையும் என்கிட்ட சொல்லுச்சு. அது என்னன்னா, சக்தி சீரியலில் அர்ணவ் நடிச்சுக்கிட்டு இருக்கிறப்போ, ஜிம் போயிட்டு இருந்து இருக்காரு, அப்பதான் அந்த இலங்கை பெண்ணான பிரசன்னாவோடு அறிமுகம் ஆகி இருக்கு.
முதலில் அந்த பொண்ணு ரசிகர் என்கிற மாதிரி தான் பேசி இருக்காங்க. பிறகு தான் அப்படியே அவங்களுக்குள்ள லவ் வந்திருக்கு. அந்த பொண்ணு அப்போ ஃபேமிலியோட வளசரவாக்கத்தில் தங்கி இருந்திருக்கு.அப்போ அந்த பொண்ணு பேமிலியோடவே தங்கியிருந்திருக்கிறார் .அந்த பொண்ண லவ் பண்ணதுக்கு முன்னாடி அர்ணவ் தனியா தான் வீட்டு எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.
பிறகு இங்களுக்குள்ள லவ் வந்ததும் அந்த பொண்ணோட குடும்பத்தோடவே தங்கி இருந்திருக்காரு. அந்த பொண்ணு வீட்டிலேயும் எல்லாருக்கும் தெரியுமாம். அப்போ அந்த பொண்ணோட குடும்பத்த வச்சு அர்ணவ் அம்மா கிட்டயும் கல்யாணம் பற்றி பேச சொல்லி இருக்காரு.ஆனா அதுக்கு அர்ணவ் அம்மா சம்மதிக்கலையாம்.
அப்போ தான் அந்த பொண்ணு கன்சிவா ஆகி இருக்கா, அதுவரைக்கும் நல்லா பழகிக்கொண்டு இருந்த அர்ணவ் அந்த பொண்ணு கன்சீவ் ஆனதும் அந்த பொண்ணை அவாய்ட் பண்ண தொடங்கி இருக்காரு. அதுக்கு பிறகு நடந்ததை எல்லாம் எனக்கு அர்ணவ் ஃப்ரண்டான நேசம் என்கிற அண்ணா தான் எல்லாத்தையும் சொன்னாரு என்று திவ்யா கூறி இருக்கிறார்.
மேலும் இந்த விஷயத்தை பற்றி அர்ணவின் நண்பரான நேசம் பேசுகையில், திவ்யா சொல்றதெல்லாம் உண்மைதாங்க, எப்பவுமே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது தான் எனக்கு போன் பண்ணுவான். அப்படி தான் அன்னைக்கும் போன் பண்ணுனான். அப்போ நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னான். அதோட பொண்ணு கர்ப்பமாக இருப்பதையும் சொன்னான். அபார்ஷன் பண்ணனும்னு சொன்னான். நான் தான் அவனுக்காக ஹாஸ்பிடலுக்கு அபார்ஷன் பண்ணுவதற்காக கூட போனேன் என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த விஷயம் மட்டுமல்ல இன்னும் பல ரகசியங்கள் அர்ணவ் பற்றி என்கிட்ட இருக்கு, அதற்கான ஆதாரமும் என்கிட்ட இருக்கு, எல்லாத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்று திவ்யா கூறி இருக்கும் நிலையில் இனி இதற்கு எல்லாம் அர்ணவ் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications