ஒரே பெட்ல அந்த மாதிரி மூணு பேரும்.. ஒரு பெக் போட்டுக்கிட்டு..திவ்யா வெளியிட்ட அர்ணவ் ஆடியோ
சென்னை: சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் அவருடைய கணவர் அர்ணவ் பெங்களூர் டாக்டர் பெண்ணிடம் பேசிய ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஆடியோவில் அர்ணவ் அவரோடு சீரியலில் நடித்த நடிகைகள் பற்றி அதில் பேசி இருக்கிறார்.
மேலும் அவரோடு சீரியலில் நடித்த இரண்டு பெண்களோடு தான் ஒரே பெட்டில் படுத்து இருந்ததாகவும் அப்போது குடித்துவிட்டு பேசிக் கொண்டிருந்ததாகவும் அதில் பேசி இருக்கிறார்.

சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் மற்றும் அவருடைய கணவர் அர்ணவ் குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து இருந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் கருத்து வேறுபாடால் சண்டை வந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த தன்னை அர்ணவ் அடித்து துன்புறுத்துகிறார் என்று திவ்யா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதற்காக போலீஸ் விசாரணை செய்து அர்ணவை ஜெயிலில் அடைந்து இருந்தனர். அதற்குப் பிறகு சில மாதங்களாக இவர்களுடைய பிரச்சனை பெரிய அளவில் சமூக வலைதளத்தில் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திவ்யாவிற்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் கைக்குழந்தையோடு திவ்யா பிரபல செய்தி சேனலில் அர்ணவ் பற்றி பல ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் அவர் பேசுகையில், எனக்கும் அர்ணவ்க்கும் நடந்த பிரச்சனைகள் எல்லாமே எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அர்ணவ் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகும் திருந்தல. அதுதான் இப்போ நான் பேச போறேன் அவர் ஜெயிலுக்கு போயிட்டு வந்து என்னவெல்லாம் செஞ்சிருக்கார் என்கிற ரகசியத்தை தான் நான் வெளியிட்டு இருக்கேன்.
நானும் கூட அர்ணவ் ஜெயிலுக்கு போயிட்டு வந்ததால் இனி திருந்திடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் கொஞ்சம் கூட மாறவே இல்ல. ஜெயிலில் இருந்து வந்த பிறகு அர்ணவ்க்கு பெங்களூர் டாக்டர் பெண் ஒருவர் அறிமுகம் கிடைச்சிருக்கு. அந்த பொண்ணு கிட்ட காதலிக்கிற மாதிரி அதிகமா பேசி இருக்காரு. அந்த பொண்ணுக்கு ஒரு கட்டத்தில் எங்களோட பிரச்சனை தெரிய வந்திருக்கு.
அப்போ தான் அந்தப் பொண்ணு எனக்கு கால் பண்ணி என்னோடு பேசி ஸ்கிரீன் ஷாட் ரெக்கார்டு எல்லாம் எனக்கு அனுப்பிச்சி. அதைக் கேட்டு நான் ஆடிப் போயிட்டேன். என்கிட்ட பேசின மாதிரியே அந்தப் பொண்ணு கிட்டயும் பேசி இருக்காரு. அதிலும் நான் ஆரம்பத்திலேயே அர்ணவ்க்கு அவருடன் சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவருக்கு தொடர்பு இருக்குன்னு சொன்னது பற்றியும் பேசி இருக்காரு.
அந்த டாக்டர் பொண்ணு அர்ணவிடம் நீங்க உங்க கூட நடிக்கிற நடிகையோடு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க. உங்களுக்குள்ள காதல் ஏதும் இருக்கா என்று கேட்க, ஆமா காதலிச்சோம் பிசிகல் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்தோம். நாங்க ரெண்டு பேரும் ஒரே மதம் என்கிறதால எங்களுக்கு காதலுக்கு பிரச்சினை வராது நினைச்சேன். ஆனா எங்க அம்மா இதுக்கு சம்மதிக்கல. அதனால நான் அந்த நடிகையிடம் இனி நல்ல நண்பர்களா இருக்கலாம்னு சொல்லிட்டேன். ஆனா அவா அதை ஏத்துக்கல.
நான் நடிச்சுக்கிட்டு இருக்குற சீரியலில் இன்னொரு நடிகையும் இருக்காங்க. அவங்க சில நேரம் எனக்கு போன் பண்ணி சாப்பிட கூப்பிடுவாங்க. அப்படியே நாங்க மூணு பேரும் போய் சாப்பிட்டு அந்த நடிகையோட வீட்டுக்கு போயிடுவோம். கொஞ்சமா ஒரு பெக் குடிச்சிட்டு அப்படியே அவங்க வீட்ல ஃப்ளோர்ல போடுற மாதிரி பெட் இருக்கு, அந்த பெட்டுல மூணு பேரும் கொஞ்ச நேரம் படுத்து எதையாவது மொக்கையா, அசிங்கமா பேசிட்டு பிறகு வந்துருவோம் என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.
தற்போது இதை வெளியிட்ட திவ்யா ஸ்ரீதர் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எப்போதும் திருந்த மாட்டாங்க என்பதற்கு அடையாளமாக தான் அர்ணவ் இருக்காரு. அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும் என்பதற்காகத்தான் நான் இந்த ஆடியோ ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு இருக்கேன். நான் ஏமாந்த மாதிரி இன்னும் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக தான் நான் இப்படி பண்ணி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications