பாரதி கண்ணம்மா சீரியல் முடிவு.. மீண்டும் ஜீ தமிழில் நடிகை ஃபரீனா.. கூடவே “பிரபல” தொகுப்பாளர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் ஆகஸ்ட் 6 ஆம் தேதியோடு முடிவடைய இருக்கிறது.
இந்த சீரியலில் நடிகை ஃபரீனா வெண்பா கேரக்டரில் நடித்து வந்தார். இந்த நிலையில் சீரியலின் முடிவை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து மீண்டும் ஜீ தமிழுக்கே போகிறார் என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் என்ன நிகழ்ச்சியில் ஃபரீனா கலந்து கொள்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பா கேரக்டரில் தொடர்ச்சியாக இரண்டு சீசன்களிலும் நடித்துவரும் ஃபரீனா சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி சமையல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.
அதில் இவருடைய கலகலப்பான பேச்சு மற்றும் இவர் அணியும் ஆடை, அணிகலன்கள் பார்ப்பதற்காகவே அதிகமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் கதாநாயகி என்று தான் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் பிறகு தான் இவர்தான் வில்லி என்பதே பலருக்கும் தெரியவந்தது.
அதுபோல சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கடைசி வரைக்கும் சீரியலில் தொடர்ச்சியாக நடித்துவிட்டு குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களில் மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசனிலும் இவர் நடித்து வந்தார். ஆனால் பல எபிசோடுகளுக்கு பிறகு தான் இவருடைய காட்சிகள் வர தொடங்கியது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வருகிறது.

முதல் சீசனில் இருந்த வில்லதனம் வெண்பாவிற்கு இரண்டாவது சீசனில் இல்லை என்று அதிகமான ரசிகர்கள் கூறி வந்தனர். நடிப்பில் கூட வெண்பாவிற்கு அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி வந்த நிலையில் இப்போது அவர் மீண்டும் தன்னுடைய தாய் வீடான ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு போகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அதாவது ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ரியாலிட்டி ஷோவான டக்கர் டக்கர் என்ற நிகழ்ச்சியில் நடிகை ஃபரீனா மற்றும் ஆர்ஜே விஜய் இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஆர்.ஜே விஜய் ஜி தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஜாலியான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications