ஷோபாவின் கழுத்து.. ஆஸ்பத்திரியில் ஆடையின்றி சில்க்? படாபட் ஜெயலட்சுமி கன்பார்ம் விஷம்: பிரபலம் பளிச்
சென்னை: 50களில் பிரபலமான ஆளவந்தான் கொலை வழக்கு குறித்தும், போஸ்ட் மார்ட்டங்களில் நடக்கும் நடைமுறைகள் குறித்தும் விரிவாகவே டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அத்துடன், பிரபல நடிகைகளின் சடலங்களை போஸ்ட் மார்ட்டம் செய்ததில் தன்னுடைய அனுபவம் குறித்தும் பல்வேறு விஷயங்களை டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளது, பலருக்கும் வியப்பை தந்து வருகிறது.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "1950களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ஆளவந்தான் கொலை வழக்கு.. ஒரு பிரபல பத்திரிகையில், அந்த வழக்கு செய்திகள் வெளிவந்தவாறே இருந்தது.. இந்த கொலை வழக்கால் அந்த பத்திரிகையே அப்போது பிரபலமாகிவிட்டது.

டிரங்க் பெட்டியில் தலை
போதுமான அளவுக்கு அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாத காலகட்டத்தில்,போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது.. கோபாலகிருஷ்ணன் என்பவர்தான் இந்த துறையின் தலைவராக இருந்தார். மெரினா கடற்கரையில் மிதந்து வந்த டிரங்க் பெட்டியில் ஒரு தலை மட்டும் கிடந்தது.. அதில் பாதி அழுகி காணப்பட்டது. டெல்லிக்கு போகும் ரயிலில் உடம்பு மட்டும் கிடைத்தது. டிஎன்ஏ வசதி இல்லாத காலகட்டத்தில், அந்த தலையும், உடலும் ஒருவருடையதுதான் என்பதை கோபாலகிருஷ்ணன் நிரூபித்தார்.
மண்டை ஓட்டிலுள்ள அடையாளம், கழுத்தில் கிடந்த காயங்கள், அதிலிருந்த திசுக்களை வைத்தே இரண்டும் ஒரே உடல் என்பதை கோபாலகிருஷ்ணன் கண்டுபிடித்தார்.. ஆளவந்தான் என்பவர், சென்னை பாரீஸ் கார்னரில் பேனா கடை அதிபர் ஆவார்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே ஆளவந்தானை கொலை செய்ததும் பிறகு நிரூபணமானது.
படாபட் ஜெயலட்சுமி
நான் ராயப்பேட்டை மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, சில்க் ஸ்மிதா, விஜய ஸ்ரீ , படாபட் ஜெயலட்சுமி போன்ற பிரபல நடிகைகளின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டி வந்தது.
இதில், படாபட் ஜெயலட்சுமி விஷம் குடித்துதான் இறந்தார்.. ஆனால், அவருக்கு அரசியல் செல்வாக்கு இருந்ததால், போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் தரப்பட்டதால், அவரது சடலத்தை அப்போதே எடுத்து சென்றுவிட்டனர்.
நடிகை ஷோபா - பாலுமகேந்திரா
நடிகை ஷோபாவின் சடலத்தை பார்த்ததுமே அது தற்கொலை என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. கழுத்தில் தூக்கு போட்டு இறந்ததற்கான அடையாளம் எங்களுக்கு தெரிந்தது.. ஆனால் அப்போது பாலுமகேந்திரா மீது பழியை சொன்னார்கள்.. அவர்தான் ஷோவை கொன்றதாக கூறினார்கள். கொலைக்கு காரணங்கள் பல இருக்கலாம். ஆனால், ஷோபா செய்தது தற்கொலை என்பதை நாங்கள் அழுத்தமாக சொன்னதால்தான், பாலுமகேந்திரா விடுதலையானார்.
சில்க் ஸ்மிதா உடல்
சில்க் ஸ்மிதா மரணத்தில், முன்னுக்கு பின் முரணான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், பல தகவல்கள் அவரது இறப்பில் வெளிவரவில்லை. எனினும் நாங்கள் செய்ய வேண்டிய போஸ்ட் மார்ட்டத்தை செய்து தந்துவிட்டோம். பல செய்திகளை வெளியில் சொல்லாததால், அவரவர் விருப்பப்படி சில்க் மரணம் பற்றி பத்திரிகைகளில் எழுதி கொண்டார்கள். எங்களை பொறுத்தவரை சில்க் தற்கொலை செய்து கொண்டார்.
சில்க்கின் சடலத்தை வாங்க குடும்பத்தினர் யாரும் முன்வரவில்லை என்றார்கள்.. அதுவும் தவறான செய்தி.. அவரது சடலத்தை வாங்கி கொண்டு சென்றார்கள்.. அத்துடன், பெரிய பெரிய நபர்கள் சில்க் ஸ்மிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
துணியில்லாமல் கிடந்தாரா சில்க்
அதேபோல, பிணவறையில் துணியில்லாமல் சில்க் கிடந்ததாகவும் சொன்னார்கள்.. அதுவும் ஆளாளுக்கு விட்ட கதைகள்.. பிணவறையில் சடலங்களை கொண்டு போனால், அதற்கான துணிகளை போட்டுதான் மூடி வைத்திருப்போம்.. அவர்கள் உடுத்தியிருந்த உடைகளுடன் வைத்திருக்க மாட்டோம்..
உடம்பிலுள்ள துணியை முழுமையாக விலக்கிவிட்டுதான் சடலங்களை அடையாளம் காட்டுவோம்.. வெறுமனே முகத்தை காட்ட கூடாது. அப்படி முகத்தை மட்டும் காட்டினால், முகம் ஒருவருடையது, உடல் வேறொருவருடையது என்று அடையாளம் காட்டுவோர் சொல்லக்கூடும். எனினும் பலரும் தங்களது உறவினர்களின் அந்த சடலங்களை முழுமையாக பார்க்க விரும்ப மாட்டார்கள்..
எனினும், முழுமையாக அடையாளம் காண்பது முக்கியம்.. உதாரணத்துக்கு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது வயிற்றில் வண்டி ஏறியிருக்கலாம்.. அதற்கான அடையாளம் வயிற்றில்தான் தெரியும்.. அப்படியிருக்கும்போது, வயிற்றை காட்டிதான் ஆகவேண்டும்" என்றெல்லாம் தன்னுடைய போஸ்ட் மார்ட்டம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் டாக்டர் காந்தராஜ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications