சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் கேப்ரில்லா.. ஆனால் ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கேப்ரில்லா சமீபத்தில் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்ததும் சன் டிவியில் புது சீரியலில் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
அதோடு சன் டிவியில் கேப்ரில்லாவிற்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகன் யார்? எந்த சீரியலில் கேப்ரில்லா நடிக்கப் போகிறார்? என்ற விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை கேப்ரில்லாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் சின்ன திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோ சூட் நடத்தி இளைஞர்களை தன்னுடைய ரசிகர்களாக மாற்றியிருக்கும் கேப்ரில்லா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
அதற்கு முன்பே இவர் 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் 7சி சீரியலில் தன்னுடைய நடிப்பை தொடங்கிய கேப்ரில்லா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதுவும் இவர் 5 லட்சம் ரூபாயுடன் வெளியேறியது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார். இப்படியான நிலையில்தான் கேப்ரில்லாவிற்கு ஈரமான ரோஜாவே சீசன் 2 வில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் தன்னுடைய நடிப்பை அருமையாக காட்டியிருந்தார்.
ஆனால் சீரியலில் அதிகமாக அழுது கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை அடிக்கடி காட்டிக் கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் தான் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது. ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் முடிவடைந்த பிறகு கேப்ரில்லா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது சன் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் சீரியலில் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார்.
இதுவரைக்கும் விஜய் டிவி சீரியல்களில் அதிகமாக இருந்த கேப்ரில்லா இப்போதும் விஜய் டிவியில் இருப்பார் என்று நினைத்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதோடு கேப்ரில்லா நடிக்கப் போகும் புது சீரியலை வானத்தைப்போல சீரியலை தயாரித்து வரும் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
இந்த சீரியலுக்கு டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை இந்த சீரியலுக்கான முதல் நாள் சூட்டிங் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் கேப்ரில்லாவிற்கு ஜோடியாக நந்தினி மற்றும் கண்ணான கண்ணே சீரியல்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ராகுல் ரவி தான் நடிக்கிறார். இந்த நிலையில் இன்று நடந்த பூஜையில் ராகுல் ரவி, கேப்ரில்லாவோடு சீரியலில் நடிக்கும் நடிகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications