பேபி பம்ப் தெரிய கருப்பு புடவையில் போட்டோ வெளியிட்ட சன் டிவி சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை கேப்ரில்லா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கருப்பு புடவையில் போட்டோ சூட் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பகிர்ந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
குழந்தை பேறு என்பது பலருடைய கனவாக இருக்கிறது. சமீபத்தில் பல சின்னத்திரை நடிகைகள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அடுத்தடுத்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த கேபிரில்லாவும் தன்னுடைய கர்ப்பத்தை அறிவித்திருந்தார்.

சுந்தரி சீரியல் முடிவடையும்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது சீரியல் முடிவடைந்ததும் சீரியல் மற்றும் சினிமா எதிலும் நடிக்காமல் சென்னையில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்பி போயிருக்கிறார். கர்ப்பகாலத்தை தன்னுடைய சொந்த ஊரில் என்ஜாய் பண்ணிக் கொண்டு அங்கிருந்தபடியே வயல் வரப்புகளில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் மார்டன் உடையிலும், புடவையிலும் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து இவர் பதிவிட்டு வரும் நிலையில் இவருடைய உடல் நலத்தை ரசிகர்கள் கமெண்ட்களில் கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கர்ப்பமாக இவர் இருக்கும்போதும் தன்னுடைய நடிப்பு பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதோடு தன்னுடைய மாணவர்களின் புது ஷார்ட் பிலிம் வீடியோக்களையும் கேப்ரில்லா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
கிராமங்களில் இருக்கும் பலர் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவ்வளவு சீக்கிரமாக அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடாது. அது போல் தான் ஆரம்பத்தில் வீட்டின் எதிர்ப்பையும் மீறி எப்படியாவது சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று கேப்ரில்லா சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் அவருக்கு சென்னையில் உதவி செய்து கேப்ரில்லா சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக அவரை பல ஆடிஷனுக்கு கூட்டிட்டு சென்றது சுருளி என்பவர் தானம். அவரைதான் பிறகு கேப்ரில்லா காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆனாலும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ஆனால் கேப்ரில்லா தன்னுடைய கணவரை பிரியப் போகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு வதந்தி பரவி வந்தது. அப்போது தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருந்தார். அதுபோல கேப்ரில்லா ஆரம்பத்தில் டிக் டாக் ஆக்டிவ்வாக இருந்த காலகட்டத்தில் அதில் கதை சொல்லலாமா என்ற தலைப்பில் கவிதைகள் படித்துக்கொண்டிருந்தார்.

அதற்குப் பிறகு ஷார்ட் பிலிம் நடிக்க தொடங்கி இருந்தார். அப்போது விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் அவரால் இருக்க முடியவில்லை பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். பிறகு சன் டிவியில் சுந்தரி சீரியல் மூலமாக பல குடும்பத்தின் செல்ல மருமகளாக மாறிவிட்டார்.
அதுபோல சினிமாக்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் தன்னைப்போல சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி பட்டறையை தொடங்கி நடிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications