Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுந்தரி சீரியலின் தாக்கம் நிஜ வாழ்க்கையிலும்.. நடிகை சைத்ராவால் தான் நடந்தது.. கேப்ரில்லா பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லா செல்லஸ் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதைத்தான் நடிக்கும் சுந்தரி சீரியலில் தாக்கம் நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

அதோடு தனக்கு தைரியத்தை சொல்லிக் கொடுத்தது நடிகை சைத்ரா தான் என்றும் மேலும் சில தகவல்களையும் கேப்ரில்லா பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

டிக் டாக் செயலி ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிச்சயமாக இருந்து கேப்ரில்லா செல்லஸ். முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். சிவப்பாக இருப்பது தான் அழகு என்ற மாயை மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் கருப்பு நிறமும் யாருக்கும் குறைந்ததில்லை. திறமை ஒன்று போதும் என்று நிரூபிக்கும் விதமாக இவர் சீரியலில் அறிமுகமானார். அதை பலரும் பாராட்டி இருந்தனர்.

Actress Gabriella shared some more information about actress Chaitra who gave her courage

ஆரம்பத்தில் சுந்தரி கிராமத்தில் வளர்ந்து வரும் நிலையில் அவர் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று விடாமுயற்சியோடு அதற்காக படித்துக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு திருமணம் முடிந்தது திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட பல பிரச்சனைகள், கஷ்டங்களையும் தாண்டி சுந்தரி இப்போது ஒரு கலெக்டராக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் சீரியலில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டியே வருகின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பிடித்து இருக்கிறது. அதனாலேயே இந்த சீரியல் டிஆர்பியில் டாப் 10 இடங்களுக்குள் வந்துவிடுகிறது. இந்த நிலையில் சுந்தரி சீரியலில் சுந்தரியாக அனைவர் மனதிலும் இடம் பிடித்த கேப்ரில்லா சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் பொறுப்பு என்பது நமக்கு வரும்போது அதோடு பயமும் வந்து விடுகிறது. சுந்தரி சீரியலும் இப்படித்தான். அதில் கலெக்டராக வேண்டுமென்று நினைத்தேன். இப்போது ஆகியும் விட்டேன். இப்போ அந்த பொறுப்பு எப்படி கொண்டு போகப் போகிறோம் என்கிற பயம் தான் எனக்கு இருக்கிறது. பதவி வரும்போது பயம் இருக்க வேண்டும் பயம் கலந்த பொறுப்பு இப்போ இருக்கு.

Actress Gabriella shared some more information about actress Chaitra who gave her courage

பொதுவா நம்ம கனவை நிறைவேற்றுவதை விட பெரிய சந்தோஷம் வேறு எதுவும் இருக்க முடியாது. சுந்தரியால் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். உண்மை, நேர்மை, நியாயம் எல்லாம் இப்போ வந்திருக்கும் புது சுந்தரியிடம் எல்லாரும் பார்க்கலாம். உறவுக்காக போராடிய சுந்தரி இப்போ ஊருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். சுந்தரி கலெக்டராக ஆனது அதற்காகத்தான் அதுபடி தான்.

இப்போது கதையும் வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. எப்போதும் திரையில் வரும் சில விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் ஒத்து போகும். அந்த மாதிரி தான் சுந்தரி சீரியலுடைய தாக்கமும் படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் தூண்டுகோலாக மாறி இருக்கிறது. அது பற்றி நான் வெளியே செல்லும் இடங்களில் பலர் என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருவரின் கனவுக்கு முதல் படியாக நான் இருக்கிறோம் என்றால் அதைவிட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க முடியும். படிப்பு என்பது பெண்களுக்கு ரொம்பவே முக்கியம். நான் படிக்காதவன் தான். படிப்பு யார் தயவு இல்லாமல் பெண்களை முன்னேற்றம் அடைய வைக்கும். அது போல கைத்தொழிலும் தெரிந்து கொள்ள வேண்டும். யார் நம்மை விட்டு போனாலும் நம்மிடம் கல்வி இருக்கும், தொழில் இருக்கும்.

அதுபோல ஆனந்த ராகம் சீரியல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதில் நடிக்கும் அனுசியா என்னுடைய பேவரைட். அதுபோல சைத்ரா ரெட்டியும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு நடிக்க தெரியும், உழைக்க தெரியும். அதை தாண்டி வேற எதுவும் தெரியாது. ஆனால் இதை எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தது சைத்ரா தான் என்று அந்த பேட்டியில் கேப்ரில்லா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+