2வது குழந்தைக்கு தாயாகப் போகும் நடிகை காயத்ரி யுவராஜ்.. குழந்தையை குறித்து கண்கலங்கிய கணவர்
சென்னை: பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் இரண்டாவது முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார்.
எல்லாருக்குமே தெரியும் காயத்ரி யுவராஜ் ஒரு நடிகையாகவும் ஒரு டான்ஸராகவும் பலருக்கும் பரிட்சயமானவர்தான்.
அதுபோல காயத்ரி யுவராஜின் கணவரும் பிரபல டான்ஸ் மாஸ்டர். அது மட்டும் இல்லாமல் காயத்ரியோடு சில ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே காயத்ரி யுவராஜ்க்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் பல வருடங்கள் கழிந்து தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காயத்ரி யுவராஜ் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் காயத்ரி தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். இத்தனை நாட்களாக இந்த ரகசியத்தை மறைத்து வைத்து விட்டாரே என்று ரசிகர்கள் செல்லமாக அவர் மீது கோபப்பட்டு இருந்தாலும் அதற்கும் தற்போது காயத்ரியின் கணவர் யுவராஜ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
என்னன்னா நான் ஆரம்பத்திலேயே கர்ப்பமா இருக்கிறதை சொல்லிடலாம்னு சொன்னேன். ஆனா காயத்ரி தான் இந்த ஒரு மூவ்மெண்ட்டை சந்தோஷமா அவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு சொன்னா. அதனாலதான் நாங்க இத்தனை நாட்கள் இதை பற்றி வெளியே சொல்லல. இப்போ இன்னைக்கு எங்களுடைய ஐந்தாவது மாத வளைகாப்பு. அதை சந்தோஷமாக உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக காயத்ரி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது பற்றிய செய்தி தான் பரவி வருகிறது. அதற்கு காரணம் சமூக வலைத்தளத்திலும் சின்னத்திரையிலும் இவர்கள் அதிகமாக பிரபலமாக இருப்பது தான். இந்த நிலையில் வளைகாப்பு செய்யும் போது காயத்ரி கண் கலங்கி அழுதிருக்கிறார். அதற்கு காரணம் தன்னுடைய அப்பாவை தான் நினைத்துக் கொண்டதாக கூறி இருக்கிறார்.
அதுபோல எங்க வீட்டுக்கு ஒரு குட்டி காயத்ரி வர போறாங்க. நாங்க இந்த உயிரை ரொம்பவே பொக்கிஷமா பாதுகாப்போம். நாங்க ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்து இருந்தது எங்களுக்கு இப்போ கிடைச்சிருக்கு என்று கண் கலங்கிய படியே தன்னுடைய குழந்தையின் வருகைக்காக காத்திருக்கும் யுவராஜ் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். அதற்கு அதிகமானோர் ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications