பிரபல நடிகை ஹன்சிகா நாத்தனாரை சித்ரவதை செய்தாரா? போலீசுக்கு ஓடிய அண்ணி.. விஐபி வீட்டில் என்னாச்சு
மும்பை: பிரபல நடிகை ஹன்சிகா மீது போலீஸில் பரபரப்பு புகார் தரப்பட்டுள்ளது. இந்த புகாரை தந்தவர், ஹன்சிகாவின் அண்ணி ஆவார்.. இதையடுத்து, புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறார்களாம்.
எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா.. அதற்கு பிறகு வரிசையாக, குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்தார்.. தெலுங்கிலும், மலையாளத்திலும் சில படங்கள் நடித்துள்ளார்..

இவர் கடந்த 2022ம் ஆண்டு தன்னுடைய தொழிலதிபரும் தன்னுடைய காதலருமான சோஹேல் கதுரியா என்பவரை, ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஹன்சிகா மீது, அவரது அண்ணி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஹன்சிகாவின் அண்ணியும் ஒரு நடிகையாவார்.. மாதா கி சௌகி என்ற ஹிந்தி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் முஸ்கான் நான்சி ஜேம்ஸ்.
நடிகை ஹன்சிகா: நடிகை ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு, நடிகை நான்சியுடன் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்..
அதாவது ஹன்சிகாவின் திருமணம் முடிந்த 10 நாட்களுக்குள், விவாகரத்து கோரி விண்ணப்பம் அளித்தார் நடிகை நான்சி. அப்போதுமுதல் தம்பதி இருவரும் பிரிந்து வருகிறார்கள். இந்நிலையில்தான், தன்னுடைய கணவர், மாமியார், நாத்தனார் மீது மும்பை போலீசில் புகார் தந்துள்ளார் நான்சி.
தலையீடுகள்: அந்த புகாரில் "ஹன்சிகாவும், அவரின் அம்மா மோனாவும், எங்களது இல்லற வாழ்வில் மூக்கை நுழைத்து கொண்டேயிருந்தனர். அவர்களது அதீத தலையீட்டால், என்னுடைய கணவர் பிரசாந்துடன் அளவுக்கு அதிகமாக பிரச்சனை ஏற்பட்டு, அது தீர்க்க முடியாத அளவுக்கு போய்விட்டது.. இவர்களது பேச்சை கேட்டுக் கொண்டு, கணவர் பிரசாந்த் என்னை கொடுமைப்படுத்துகிறார்.
கணவரின் கொடுமையால் எனக்கு Bell Palsy என்ற குறைபாடு, அதாவது முகத்தின் ஒரு பகுதி செயல் இழந்துவிட்டது. ஹன்சிகா, மோனா, பிரசாந்த் ஆகியோர் என்னிடமிருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை கேட்கிறார்கள். சொத்து விஷயத்தில் மோசம் செய்கிறார்கள். நான் கணவருடன் வாழ விருப்பம் தெரிவித்தும்கூட, அதற்கு அவர்கள் அனைவருமே தடையாக இருக்கிறார்கள்" என்றெல்லாம் மும்பை போலீசில், நடிகை நான்சி புகார் தந்துள்ளாராம்.
எப்ஐஆர்: இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளார்களாம்.. அதாவது ஹன்சிகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. ஹன்சிகா, மற்றும் குடும்பத்தார் மீது FIR போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications