எனக்கு எப்படி கல்யாணம் ஆச்சுன்னு தெரியலை! அடி வாங்கி இருக்கிறேன்..மனம் திறந்த எதிர்நீச்சல் நந்தினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை ஹரிப்பிரியா நந்தினி கேரக்டரில் நடித்து வருகிறார்.

சீரியலில் தன்னுடைய நிலை மற்றும் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய நிலை பற்றி பல்வேறு தகவல்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

ஹரிப்பிரியா பேசிய வார்த்தைகளை ரசிகர்கள் பலர் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

அதிகரிக்கும் வரவேற்பு

அதிகரிக்கும் வரவேற்பு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பலதரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இருக்கிறது பொதுவாக சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள். ஆனால் எதிர்நீச்சல் சீரியல் மட்டும்தான் ஆண்களும் இளைஞர்களும் பார்த்து வருகிறார்கள். இந்த சீரியல் ப்ரோமோ வெளியான சில நொடிகளில் லைக்குகள் மில்லியன் கணக்கில் குவிந்து வருகிறது. அடுத்தடுத்து ப்ரோமோவிற்கு கமண்டுகளும் குவிந்து கொண்டே இருக்கும். பல நேரங்களில் இந்த சீரியலின் ப்ரோமோ ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகிக்கொண்டே போகிறது.

தெரியாத கேரக்டர்

தெரியாத கேரக்டர்

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கேரக்டர்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றனர். அதில் நந்தினி கேரக்டரும் ஒன்று சீரியலில் சுவாரசியத்தை கூட்டும் காமெடி கேரக்டராக நந்தினி தான் இருக்கிறார். என்னதான் படித்திருந்தாலும் படித்த பெண்கள் எல்லாமே அறிவாக இருக்க மாட்டார்கள். வெகுளியாகவும், பல நேரங்களில் பல விஷயங்களை தெரியாதவர்களாகவும், எப்படி சில இடங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பது புரியாதவர்களும் இருக்கின்றனர் என்பதை நந்தினி கேரக்டர் பலருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்.

திருமணம் பற்றி தெரியாது

திருமணம் பற்றி தெரியாது

அதனாலயே நந்தினியை அதிகமான ரசிகர்களுக்கு பிடித்து இருக்கிறது என்று கூறி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு கூட நந்தினி கேரக்டர் பிடித்திருக்கிறது என்று பல நேரங்களில் பல பேட்டிகளில் பலர் தெரிவித்திருக்கும் நிலையில், தற்போது நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்பிரியா பல தகவல்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் இந்த சீரியலில் எனக்கு எப்படி திருமணம் நடந்தது என்று எனக்கே தெரியாது. இனி போகிற போக்கில் தான் கதை எல்லாம் எனக்கு தெரியவரும். சில நாட்களுக்கு முன்புதான் ரேணுகாவின் திருமணம் வெளியே வந்தது. அதுபோல பிறகு நாட்களில் கூட என்னுடைய திருமணம் எப்படி நடந்தது என்பது தெரிய வரலாம் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் நான் கதிரிடம் அதிகமான முறை நிஜத்திலும் அடி வாங்கி இருக்கிறேன். ஒரு சில முறை நடிப்புக்காக அடித்தாலும் அது நிஜத்தில் நம் மீது விழுந்து விடும். அந்த மாதிரி தான் எனது கிடைத்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்

மறக்க முடியாத பாராட்டு

மறக்க முடியாத பாராட்டு

அது மட்டுமல்லாமல் தான் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் பலரும் இந்த சீரியலில் தன்னுடைய கேரக்டரை பாராட்டுகின்றனர். குறிப்பாக சமீபத்தில் நான் ஒரு ஈவண்டுக்கு போயிருக்கும் போது ஒரு பேங்க் ஆபிஸர் பெண் என்னிடம் நானும் சில வருடங்களுக்கு முன்பு உங்களுடைய நிலைமையில் தான் இருந்தேன். ஆனால் இன்று நான் இந்த நிலைமையில் இருக்கிறேன். நான் வாழ்க்கையில் ஜெயித்து விட்டேனா என்று எனக்கே தெரியாது. ஆனால் கண்டிப்பாக நீங்கள் ஜெயிக்க வேண்டும். நீங்கள் ஜெயித்தால் எனக்கு சந்தோஷம் என்று கூறினார். இந்த மாதிரி பாராட்டை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது என்று ஹரிப்பிரியா உருக்கமாக பேசியிருக்கிறார்.

இயக்குனரின் பாராட்டு

இயக்குனரின் பாராட்டு

அதுமட்டுமல்லாமல் பல வருடங்கள் கழித்து நான் திரும்பிப் பார்க்கையில் இந்த மாதிரி ஒரு சீரியலில் இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறேன் இதனால் பலருக்கும் பல தகவல்கள் போயிருக்கிறது என்பது எனக்கு சந்தோஷத்தை தான் கொடுக்கும். இந்த சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒருமுறை நான் ஹாஸ்பிடலில் இருப்பது போன்ற சீன் வரும், அப்போது அக்கா நான் செத்து போயிட்டா என் குழந்தைகளை பார்த்துக்கோங்க என்று நான் உருக்கமாக பேசுவது போன்று இருக்கும். அந்த சீனில் நான் நடித்து முடித்த போது டைரக்டர் சூப்பரா இருந்தது என்று சொன்னார். அது என்னால் மறக்க முடியாத பாராட்டு என்று பல தகவல்களை ஹரிப்பிரியா பகிர்ந்து இருக்க ரசிகர்கள் ஹரிப்ரியாவை பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+