எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரியாகும் பிரபல நடிகை.. இனி தான் ஆட்டம் ஆரம்பம்! எதிர்பார்க்காத கதை!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இந்த வாரத்தில் பிரபல நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கிறார். அவருடைய வருகையால் சீரியலில் கதைக்களம் மாற இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் பல வருடங்களுக்குப் பிறகு எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. கோலங்கள், மெட்டிஒலி வரிசையில் எதிர்நீச்சல் சீரியலும் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்து விட்டது. தற்போதைய சூழ்நிலையில் சீரியலை பார்க்காத ரசிகர்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்தனர்.

மாரிமுத்துவின் இறப்பு
ஆனால் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணத்திற்கு பிறகு சீரியலின் கதைக்களம் அதிரடியாக மாற்றப்பட்டது. ஆனால் ஒரே கதை சில மாதங்களாக இழுத்துக் கொண்டு இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது போல இந்த சீரியலில் பெண்கள் முன்னேற்றம் எந்த இடத்திலும் வராமல் ஒவ்வொரு இடத்திலும் குணசேகரனிடம் பெண்கள் தோற்றுக் கொண்டே இருந்தனர். அதுவும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
சீரியல் திடீர் முடிவு
இந்த நிலையில் தான் இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று முடிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அதிகமான நெகட்டிவ் கமெண்ட் ஆக இருந்தாலும் இந்த சீரியல் முடிவடைந்ததும் அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கமெண்ட் போட்டு வந்தனர். இந்த நிலையில் திருச்செல்வம் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் புதிய கோணத்தில் தொடங்க இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

அவர் சொன்னது போலவே சில மாதங்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று முதல் பாகம் முடிவிலிருந்து இரண்டாவது பாகத்தை தொடங்கி இருந்தனர். இப்படியான நிலையில் இந்த சீரியல் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேலே ஆன பிறகு இப்போது இந்த சீரியலில் அதிரடியான மாற்றங்கள் வந்திருக்கிறது.
சக்தியின் மாற்றம்
அதாவது இத்தனை நாட்களாக பெண்களுக்கு சப்போர்ட் செய்து வந்த சக்தி இப்போது மீண்டும் குணசேகரன் பக்கம் சேர்ந்து இருக்கிறார். எதிர்நீச்சல் பெண்கள் நான்கு பேரும் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். இனி தங்களுடைய வெளி உலக பயணத்தை தொடங்க போகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். ஒரு ஹோட்டலில் எல்லோரும் தங்கி இருக்கும் நேரத்தில் அங்கு ஒரு நபர் வந்து இவர்களிடம் பிரச்சனை செய்கிறார்.

மீண்டும் குந்தவை
அதுபோல தற்போது வெளியான ப்ரோமோவில் சில அதிரடியான திருப்பங்களும் வந்திருக்கிறது. அதாவது முதல் பாகத்தில் ஏற்கனவே சக்தியை இரண்டாவது திருமணம் செய்ய இருந்த குந்தவை இப்போது மீண்டும் வந்து இருக்கிறார். சக்தி இன்று குந்தவையை பார்த்ததும் சக்தி அதிர்ச்சியாகி நிற்கிறார். குந்தவை முதல் பாகத்தில் சக்தி எனக்கு இனி வேண்டாம் என்று விட்டு விட்டு போய்விட்டார். ஆனால் இரண்டாவது பாகத்தில் இன்று சக்தியை பார்த்ததும் குந்தவை சிரிக்கிறார்.
அதனால் இனி கதை எப்படி போகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் குந்தவை கேரக்டரில் நடிகை ஹேமா அறிமுகமாகியிருக்கிறார். ஹேமா ஏற்கனவே பல திரைப்படங்களில் டான்சராக இருந்தாலும் நடிகர் தனுஷ் நடத்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் இடம் பிடித்த என்ன வேணாலும் நடக்கட்டும் என்ற பாடலில் தனுஷ் பக்கத்தில் நின்று டான்ஸ் ஆடி இருப்பார்.

எதிர்பாராத மாற்றம்
அவருடைய டான்ஸ் பெரிய அளவில் வைரல் ஆனது. அதற்குப் பிறகு இவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இவர் வில்லியாக நடித்து இருந்தார். இனி குந்தவையின் ரீ என்ட்ரியால் சக்தி மற்றும் ஜனனி இருவரும் மீண்டும் சேரப் போகிறார்களா? அல்லது நிரந்தரமாக பிரியப் போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications