Ileana: நடிகை இலியானாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. பெயரே வித்தியாசமாக இருக்கே! குவியுது வாழ்த்து
சென்னை: நடிகர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இலியானாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்து 9 நாட்களுக்கு பிறகு இந்த செய்தியை அவர் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய மகனின் பெயரையும் அறிவித்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடிகர் சத்யராஜின் மகளாகவும், விஜய்க்கு ஜோடியாகவும் நடித்த இலியானாவை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்து இருக்க முடியாது. அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "இருக்கானா இடை இருக்கானா" என பாடல் இனியாவுக்காகவே எழுதப்பட்டது. அந்த நேரத்தில் அவர்தான் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

இலியானா கணவர்
இலியானா கடந்த 2023 ஆம் ஆண்டு மைக்கேல் டோலனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர். அப்போது இலியானா கர்ப்பமானார். அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மகன் பிறந்தார். அவருக்கு "கோவா பீனிக்ஸ் டோலன்" என்று பெயர் வைத்திருந்தார். இந்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தையை இலியானா பெற்றெடுத்திருக்கிறார்.
இலியானாவின் குழந்தை
தன்னுடைய இரண்டாவது மகன் 2025 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று தனக்கு பிறந்தார் என்று இலியானா பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் தன்னுடைய மகன் புகைப்படத்தை பகிர்ந்து "எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். இலியானாவின் இந்த பதிவை பார்த்த நடிகைகளான பிரியங்கா சோப்ரா, மலைகா அரோரா, அதியா ஷெட்டி மற்றும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
ரசிகர்களின் கேள்வி
அதில் சில ரசிகர்கள் இலியானா கர்ப்பமாக இருந்தாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இன்னும் சில ரசிகர்கள் இலியானாவின் இரண்டாவது குழந்தைக்கு வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இலியானா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாக்களில் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இப்போது தன்னுடைய இரண்டாவது மகனுக்கு "கினு ரஃபே டோலன்" என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை பார்த்ததும் ரசிகர்கள் சிலர் இந்த பெயர் வாசிப்பதற்கே புரியவில்லை, இந்த குழந்தை எப்படி இந்த பெயரை ஸ்கூலில் சொல்லப்போகிறது என்றும் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
-
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications