Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவன் இவன் பட நடிகை ஜனனிக்கு எங்கேஜ்மென்ட்.. வருங்கால கணவர் பற்றி பதிவு.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஜனனிக்கு இன்று எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. ஜனனி தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கும் நிலையில் அவருக்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் இன்று அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகளை பிரபலங்கள் பகிர்ந்து வருகிறார்கள். விஜே பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்திருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அதே நேரத்தில் நடிகை ஜனனி தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Vishal Janani

ஆரம்ப வாழ்க்கை

நடிகை ஜனனி ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது அவன் இவன் திரைப்படம் தான். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். சில வருடங்களாக அவருடைய திரைப்படங்கள் பெரிதாக வெளியாகவில்லை.

ஜனனியின் எங்கேஜ்மென்ட்

அதே நேரத்தில் சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஜனனிக்கு சாய் ரோஷன் ஷாம் என்பவருக்கும் இன்று எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. ஜனனி மற்றும் சாய் ரோஷன் ஷாமை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இவர்களுடைய ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என்று வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Vishal Janani

சென்னை பொண்ணு

ஜனனி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கோபாலபுரத்தில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு சவீதா இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறார். பிறகு ஆஸ்ட்ரேலியாவில் உள்ள
பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற சீட்டு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அங்கே படிப்பதற்காக செல்லவில்லை. படிப்பதை விட்டுவிட்டு மாடலிங்கில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்.

பெயர் மாற்றம்

அப்பொழுதுதான் அவருக்கு அவன் இவன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் சினிமாவுக்கு வந்த புதிய ஜனனி ஐயர் என்று அழைக்கப்பட்ட நிலையில் பிறகு தன்னுடைய பெயரில் இருந்து ஐயர் என்பதை நீக்கி ஜனனி என்று மாற்றிக் கொண்டார். ஆரம்பத்தில் 150-க்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை.

ஜனனி நடித்த திரைப்படங்கள்

அதை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திலும் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இவருடைய கேரக்டர் பெரிதாக பேசவில்லை. அதற்கு பிறகு தான் அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது அவருக்கு பெயர் வாங்கி கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தின் ஹிட்டை தொடர்ந்து பாகன், தெகிடி, ஏழாம் நாள், அதே கண்கள், முப்பரிமாணம், தர்ம பிரபு என்று பல படங்களில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் பிரபலம்

இப்போதும் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஏற்கனவே பிக் பாஸ் பிரபலமான பிரியங்காவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது பிக் பாஸ் பிரபலமான ஜனனியின் போட்டோக்களும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

குவியும் வாழ்த்துக்கள்

ஜனனி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். தன்னுடைய கணவர் சாய் ரோஷன் ஷாம் என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர் யார் என்பதை பற்றி கொடுக்கவில்லை. இவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் அவருடைய திருமணம் எப்போது என்று ஜனனி இன்னும் அறிவிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+