நடிகை ஜான்வி கபூரின் 65 கோடி மும்பை வீட்டில் இத்தனை வசதிகளா? ஆனால் விடாத ஒரே சர்ச்சை!
சென்னை: ஹாலிவுட்டில் இளம் நடிகைகளில் அதிகமாக பேசப்படும் பெயர்களில் ஜான்வி கபூர் பெயரும் உண்டு. மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் என்பதால் சினிமாவுக்குள் வந்தால் முதல் நாளிலிருந்து அவர் மீது எதிர்பார்ப்பும், விமர்சனமும் ஒன்றாகவே இருந்து வருகிறது. நடிப்பை விட அவருடைய வாழ்க்கை முறை, சொத்து மதிப்பு காதல், டிரஸ், சமூக வலைதள பதிவுகள் என ஒவ்வொரு விஷயமும் எப்போதும் செய்தியாகி விடுகிறது.
நடிகை ஜான்வி கபூரின மும்பை வீடு
இந்த நிலையில் மும்பை பாந்தாராவில் உள்ள அவரது 65 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட டுப்லெக்ஸ் வீடு பற்றிய தகவல்கள் மீண்டும் அவரை பற்றி சோசியல் மீடியாவில் பேச வைத்திருக்கிறது. மும்பையின் மிகவும் விலை உயர்ந்த பகுதிகளில் ஒன்றான பாந்த்ரா பாலிஹில் பகுதியில் அமைந்துள்ள இந்த டுப்லெக்ஸ் வீடு சுமார் 8,600 சதுர அடிக்கு மேல் பறந்து விரிந்துள்ளது.

ஜான்வி கபூர் வீட்டில் உள்ள வசதிகள்
இதனால் இந்த வீட்டின் விலை உயர்ந்ததாக மாற்றுவது அதன் பரப்பளவு மட்டுமல்ல வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு சாதாரண நடிகையின் வீடு என்ற உணர்வே வராதாம். தரையில் இருந்து மேற்கூரை வரை நீளும் பெரிய கண்ணாடி, ஜன்னல்கள் வீட்டிற்குள் இயற்கை வெளிச்சம் எப்போதும் நிறைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறதாம். அதுபோல வீட்டிற்குள் லிஃப்ட், அழகான தோட்டம், குடும்பத்துடன் ஓய்வாக நேரம் செலவிடும் ஓபன் பிளேஸ், நீச்சல் குளம், குளிர்காலங்களில் பயன்படுத்தும் ஃபயர் பிளேஸ் என ஒரு சொகுசு ரெசார்ட்டில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இந்த வீட்டிலேயே இருக்கிறதாம்.

ஆனால் இந்த வீட்டில் மிகப் பெரிய சிறப்பு பெரிய ஆடம்பரத்தில் மட்டும் இல்லையாம். வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் ஸ்ரீதேவியின் படங்கள், குடும்ப புகைப்படங்கள், ஓவியங்கள் என குடும்ப பாசத்தை உணர வைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூரின் சோசியல் மீடியா புகைப்படங்களில் கூட இந்த வீட்டில் பல பகுதிகளை அவர் காட்டி இருக்கிறார். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் இந்த வீடு தனிக் கவனத்தை பெற்றிருக்கிறது.
ஜான்வி கபூர் சினிமா பயணம்
கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜான்வி கபூர் ஆரம்பத்தில் ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் தான் பார்க்கப்பட்டார். அதற்குப் பிறகு படங்களில் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய முயற்சி செய்து வருகிறார். தென்னிந்திய ரசிகர்களிடம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பெரிய ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்து வருவதால் பாலிவுட்டை தாண்டி பான் இந்தியா நடிகையாக மாற முயற்சியிலும் ஜான்வி இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும் கடந்த சில வருஷங்களாக ஜான்வி கபூரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவருடைய நடிப்பை தாண்டி வேற விஷயங்கள் தான் அதிகம் பேசப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் நடித்த திரைப்படத்தில் தேவையில்லாத கவர்ச்சி காட்சிகள், உடை வடிவமைப்பு, கேமரா ஆங்கிள் போன்றவை பெண்களை வெறும் கவர்ச்சி பொருளாக காட்டுகின்றன என்று அதிகமான விமர்சனங்கள் இருந்தது.
சர்ச்சைகள்
அதோடு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் தான் ஜான்வி கபூர் நடிக்கிறார் என்றும் சிலர் சொல்லி வந்தனர். ஆனாலும் சமீபத்தில் அவருடைய நடிப்பு, கவர்ச்சி அனைத்தையும் தாண்டி அவருடைய வீடு பற்றியே பலரும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
