அந்த ஹிட் பாடல் எனக்காக எழுதியது தான்.. கடைசியில் இப்படி பண்ணிட்டாங்க! நடிகை ஜீவிதா வருத்தம்
சென்னை: விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று எந்த சேனல் பார்த்தாலும் அதில் ஒரு சில நடிகைகள் அதிகமான சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் நடிகை ஜீவிதா. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் தன்னை நினைத்து ஒரு பாடல் எழுதி, உங்களை இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சொன்ன இயக்குனர் பற்றி பேட்டி ஒன்றில் வருத்தமாக பேசியிருக்கிறார்.
பொதுவாக சினிமா, சீரியல் வாழ்க்கையில் பல நடிகைகள் நடிகர்களுக்கு திறமையும் கடினமான உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஒருவர்தான் நடிகை ஜீவிதா.

இவர் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு தைரியமான பெண்தான். எந்த விஷயங்களாக இருந்தாலும் பேட்டிகளில் பளிச் என்று பேசி விடுவார். அதுபோல அவருடைய குடும்பத்தையும் இவர்தான் தூண் போல காத்து வருகிறார்.
பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் வரும் கதாநாயகியின் ரியல் வெர்ஷன் இவர்தான் என்று சொல்லலாம். அதனால் தானோ என்னவோ அதே மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாகத்தான் இவருக்கு சின்னத்திரையில் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் அவருடைய குடும்பத்தோடு எடுக்கும் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுபோல பல சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் அவருடைய அக்காவாக இவர் நடித்திருந்தார். அதுபோல இவர் அதிகமான திரைப்படங்களை மிஸ் பண்ணி இருக்கிறார். கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நான் மிஸ் பண்ணி விட்டேன் குறைந்தபட்சம் 70 திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறேன் என்று வருத்தத்தோடு சொல்லி இருக்கிறார்.
அதற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தான். அதுபோல சிலர் எதனால் என்னை வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அடுத்தவர்கள் கூட இந்த படத்தில் நீங்கள் இருக்குறீங்க என்று சொல்லுவாங்க கடைசியில் அந்த படமே வந்துவிடும் நம்மை நடிக்க கூப்பிட மாட்டார்கள்.

சரி போகட்டும் என்று பார்த்தால் சில நன்கு பழக்கமானவர்கள் கூட என்னுடைய படத்தில் நீங்க நடிக்கிறீங்க என்று சொல்லியிருக்கிறார்கள் கடைசியில் பார்த்தால் அந்த கேரக்டரில் வேற ஒரு நடிகையை நடிக்க வைத்து விடுகிறார்கள். அதுபோலத்தான் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் சகோதரியாக எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது..
நானும் சரி என்று டெஸ்ட் சூட்டெல்லாம் எடுத்துவிட்டு வந்தேன் அப்போ எல்லாம் ஓகே என்று சொல்லி இருந்தார்கள் பிறகு என்னை கூப்பிடவே இல்லை. வேற நடிகையை நடிக்க வைத்து விட்டார்கள். அதுபோல ரெக்கை திரைப்படத்தை இயக்கிய ரத்தினவேல் எனக்கு தெரிந்தவர் தான்.

அவர் என்னிடம் பேசும்போது இந்த படத்தில் உங்களை நினைச்சு தான் "கண்ணம்மா கண்ணம்மா" பாடல் எழுதி இருக்கிறேன் உங்க கண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்கள பார்க்கும்போது என்னுடைய அத்தை பீல் வரும் அதனால் கண்டிப்பாக நீங்கள் இந்த படத்தில் நடிக்கிறீங்க என்று சொன்னாங்க. ஆனால் என்ன நடந்ததுன்னு தெரியல கடைசியில் அந்த கேரக்டரில் வேற நடிகையை நடிக்க வச்சுட்டாங்க. இது போல எனக்கு சினிமா துறையில் பல ஏமாற்றங்கள் நடந்து இருக்கிறது. ஒரு சிலர் மட்டும் சொன்னது போலவே நம்பி நமக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்று விரக்தியாக ஜீவிதா பேசியிருக்கிறார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications