புது சீரியலில் கமிட் ஆனதும் நடிகை “ஜெனிஃபர்” போட்ட போஸ்ட்.. அதிலும் இப்படி ஒரு வேண்டுகோளா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக ஆரம்பத்தில் நடித்து பிரபலம் அடைந்த ஜெனிஃபர் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சீரியல் நடிகை ஜெனிஃபர் ஒரு டஜனுக்கு மேற்பட்ட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் குணசத்திர வேடங்கள் மற்றும் நடன மாஸ்டர் ஆகவும் நடித்திருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இவருடைய தந்தை சின்னா ஒரு பிரபல நடன இயக்குனர். அதனாலேயே இவருக்கு டான்ஸ் என்பது ரத்தத்திலேயே ஊறிப்போன ஒன்றாக இருக்கிறது.

ஸ்ரீகாந்த், சினேகா நடிப்பில் வெளிவந்த பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் வாடி மச்சினியே என்ற பாடலுக்கு இவர் ஆடிய குத்தாட்டத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு டான்ஸ் என்றால் ஒரு கை பார்த்து விடும் ஜெனிஃபர் சின்னத்திரையில் சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் மற்றும் விஜய் டிவி என அனைத்து சேனல்களில் வெளிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
கலர்ஸ் தமிழில் இவர் நடிப்பில் வெளியான "அம்மன் சீரியல்" பெரிய அளவில் பேசப்பட்டது. அது போல விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் "ராதிகா" கேரக்டரில் இவர் ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஆனால் சீரியலில் ராதிகா கேரக்டர் நெகட்டிவாக போகும் என்று தெரிந்து கொண்ட ஜெனிஃபர் தான் அந்த சீரியலில் இருந்து வெளியேற போவதாக அறிவித்திருந்தார்.
அதே போல அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாகவும் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சில வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவும் ஜீ தமிழில் டாப் சீரியலாக இருக்கும் "கார்த்திகை தீபம்" சீரியலில் ரம்யா என்ற கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆரம்பமே அசத்தலாக இவருக்கு காட்சிகள் இருக்கிறது.
இந்த நிலையில் ஜெனிஃபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " கார்த்திகை தீபம் சீரியலில் நான் வரப்போகிறேன். எப்படி ராதிகா கேரக்டருக்கு லவ் அண்ட் சப்போர்ட் கொடுத்தீர்களோ அதே மாதிரி இந்த ரம்யா கேரக்டருக்கும் உங்களுடைய லவ் அண்ட் சப்போர்ட் தேவை. உங்களுடைய அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி. இந்த அழகான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த ஜீ தமிழுக்கும் நன்றி..!" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் ராதிகாவாக பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிஃபரை மிஸ் பண்ணிய ரசிகர்கள் இப்போது கார்த்திகை தீபம் சீரியலில் அவருடைய கம்பேக்கிற்க்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications