கலாச்சாரத்திற்கு எதிரானது! இதனால்தான் விலகல்.. டாப் சீரியலில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள் பதிவு
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியதே சீரியலில் நடித்து வந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகி இருக்கிறார். அவர் என்ன காரணத்திற்காக வெளியேறினார் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அருவி சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அருவி சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து ஜீ தமிழில் மௌனம் பேசியதே சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி இருந்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிகர் அசோக்குமார் நடிக்கிறார்.

நடிகர் அசோக் குமார் கோழி கூவுது திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைக்காமல் இருந்த நிலையில் முதல் முறையாக சின்னத்திரையில் மௌனம் பேசியதே சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த சீரியலில் இரண்டு தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் முடிகிறது. அதில் வில்லன் மனைவியின் தங்கையை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே அக்காவை கொலை செய்துவிட்டு தங்கச்சியை (கதாநாயகி) திருமணம் செய்ய போவார். ஆனால் தங்கச்சி திருமணத்திற்கு பிறகு நடந்த விபத்தில் அவரிடம் இருந்து கதாநாயகன் குடும்பத்திற்குள் தஞ்சம் அடைகிறார்.

அதற்கு பிறகு நடப்பதுதான் கதையாக இருக்கிறது. ஆனால் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ஜோவிதா திடீரென்று விலக போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் என்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம். மௌனம் பேசியதே சீரியலில் இருந்து நான் விலகி விட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறிது காலமாக எனது நடிப்பு, தொழில் தேர்வுகளையும் மாற்றிக் கொள்ள விரும்பினேன். ஆனால் இங்கே எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. துளசி (மௌனம் பேசியதே கதாநாயகி பெயர்) வேடத்தில் என்னுடைய கதாபாத்திரமம் எனக்கு அதிக திருப்தியை தரவில்லை. ஏனெனில் அது சுயநலமாகவும், நீண்ட மனசோர்வுடனும், நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானதாகவும் மாறியது.

ஒரு முக்கிய கதாபாத்திரமாக இதுபோன்று சுயநல கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கும் பலருக்கும் சரியாக தெரியவில்லை. மேலும் நான் பல மாதங்களாக இந்த நிகழ்ச்சியில் இடைவிடாமல் நடித்து வருகிறேன். அது எனக்கு ஒரு கடின சூழலாக மாறியதால் நான் திருப்தி அடையவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு வாழ்க்கை என்பது நேர்மை மற்றும் சுயமரியாதை பற்றியது. அந்த குணங்களைப் பெறவும் அந்த நபராக இருக்கவும் நான் மிகவும் கடினமாக முயற்சிப்பேன். நான் என்னைப் பற்றி மிகவும் ஏமாற்றமடைந்த காலத்தில் அது நழுவ அனுமதித்தேன். அதனால் மௌனம் பேசியதே சீரியலில் இருந்து நான் விலக விரும்புகிறேன் என்பதை ஒரு கசப்பான புன்னகையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை நீங்கள் எனக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய போது இதே "சுயமரியாதை" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். எனக்கு சுயமரியாதை அதிகம் அதனால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று அவர் அறிவித்தது போலவே இப்போது ஜோவிதா எனக்கு சுயமரியாதை முக்கியம் கலாச்சாரம் இந்த சீரியலில் மீறப்படுகிறது என்று சில காரணங்களை கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications