ஒரு பக்கம் ரம்யா கிருஷ்ணன்.. மறுபக்கம் காயத்ரி ரகுராம்... மாஸ் காட்டும் ஜூலி.. ஆனால்! விஷயம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இப்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் ஜூலி லேட்டஸ்ட் ஆக சில நடிகர்களோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்க அதுதான் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், காயத்ரி ரகுராம் மற்றும் குஷ்பூ இன்னும் சிலரோடு ஜூலி புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அதோடு அந்த புகைப்படத்திற்கு அழகான ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு மிகவும் பரிசயமான போட்டியாளர்களில் ஒருவர் தான் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரிய அளவில் புரட்சி செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேற லெவலில் வைரல் ஆகிவிட்டார். அதுவும் ஆரம்பமான முதல் சீசனில் ஆரம்பமான நாட்களில் குழந்தை போல துருதுருவென இருந்த ஜூலிக்கு ஓவியாவோடு ஏற்பட்ட சண்டை தான் பிரச்சனையாக அமைந்தது.
அந்த நேரத்தில் ஜூலி சொன்ன வார்த்தையால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இப்ப வரைக்கும் அது குறித்து ஒரு சிலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் தனக்கு வந்த நெகட்டிவிட்டி எல்லாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்து விட்டு அடுத்தடுத்த வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஜூலிக்கு பல பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஜூலியே தன்னிடம் காதலன் பண மோசடி செய்துவிட்டார் என்று போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.

அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது அதற்குப் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி தான் அதுவரைக்கும் வாங்கி வைத்திருந்த நெகட்டிவ் எல்லாவற்றையும் புறம்தள்ளிவிட்டு பலருடைய நன்மதிப்பை பெற்று விட்டார். அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வில்லியாகவும் நடித்து வந்தார். இந்த நிலையில் இப்போது அந்த சீரியல் முடிவடைந்த பிறகு எதிலும் தலை காட்டாமல் ஜூலி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக சில நடிகைகளோடு புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டிவிட்டு இருக்கிறார்.
அது இணையத்தில் மீண்டும் பத்திக் கொண்டு உள்ளது. ஏற்கனவே போட்டோ சூட்டுக்கு பெயர் போன ஜூலி சில மாதங்களாகவே எந்த போட்டோ சூட் எடுக்கவில்லையே என்று ரசிகர்கள் பீல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது உடல் எடை குறைந்து ஆளே மாறி இருக்கும் ஜூலி நடிகை ரம்யா கிருஷ்ணன், கலா மாஸ்டர், காயத்ரி ரகுராம், டிடி மற்றும் அவருடைய அக்கா பிரியதர்ஷினி போன்ற ரோடு புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு ஜூலி இந்த போஸ்ட்க்கு கேப்ஷன் கொடுக்க வார்த்தைகளே இல்லை என்று க்யூட்டான ஒரு கேப்ஷன் கொடுக்க அது அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. அதிலும் ஆரம்பத்தில் ஜூலி எந்த போஸ்ட் போட்டாலும் நூற்றுக்கு 90 கமெண்ட் நெகட்டிவ் ஆகவே இருக்கும் இப்போது எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. அது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் எனர்ஜியை தான் கொடுத்திருக்கும்.
ஆனாலும் ஜூலி எப்போது சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போறீங்க என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதுபோல இனி நெகட்டிவ் கேரக்டர் எல்லாம் உங்களுக்கு வேண்டாம் ஒன்லி கதாநாயகியாக வாங்க என்றும் சின்னத்திரை ரசிகர்களும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படியோ இந்த மீட்டிங் மட்டும் என்னவென்று ஜூலி சொல்லவில்லை என்றாலும் அதிகமான ரசிகர்கள் ஜூலி காயத்ரியோடு இருப்பதை விமர்சித்து வருகிறார்கள். ஏற்கனவே ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியை அக்கா என்று சொல்லி அழைத்து ஆரம்பத்தில் ஒரே கட்சியாக இருந்து பிறகு ஓவியா விஷயம் தெரிந்த பிறகு காயத்ரி ஜூலியை மெல்ல மெல்ல விலகிக்கொண்டார்.
இந்த நிலையில் அது குறித்து இப்போதும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஏழு சீசன் முடிவடைந்தாலும் இந்த முதல் சீசன் போட்டியாளர்களுக்கு ஏகபோக மவுசுதான். காரணம் இந்த சீசனில் விளையாடிய போட்டியாளர்கள் தான் எந்த விளையாட்டையும் பார்த்து எந்த இடத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொள்ளாமல் உண்மையாக விளையாடினார்கள் என்பதும் பலருடைய வாதம்.
சரி எப்படியோ பல நாட்களுக்குப் பிறகு ஜூலி போஸ்ட் போட்டு அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார். அதிலும் ஒரு சிலர்கள் இதுபோல இனி அடிக்கடி போஸ்ட் வேண்டும் என்று செல்லமாக ஆணையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications