நடிகை கனகாவின் திடீர் வீடியோ.. நான் என்ன ஆஸ்கார் அவார்டு வாங்கின நடிகையா? ஏன் இப்படி பண்ணுறீங்க?
சென்னை: நடிகை கனகாவிடம் ஒரு youtuber அவர் வீட்டு வாசலில் வைத்து உங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டபோது அதற்கு கோபமாக கனகா பதில் அளித்து இருந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சினிமாவை விட்டு விலகி இருக்கும் கனகா தனிமையை விரும்பி இருக்கும் நிலையில் அவரை பின்தொடரும் சிலர் அவரிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்பதற்காக தொந்தரவு செய்து வருவதாக அந்த வீடியோவில் கனகா கோபப்பட்டு இருக்கிறார்.

80 காலகட்டத்தில் தொடங்கி 90ஸ் காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகை கனகா சமீபத்தில் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்களாக மாறிய இளைஞர்கள் ஏராளம். கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி எத்தனையோ வருடங்களாகி இருந்தாலும் கரகாட்டக்காரன் திரைப்படம் பார்க்கும்போது இப்போதும் கனகாவை தேடிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
புகழின் உச்சத்தில் வலம் வந்த நடிகை கனகா அவருக்கு தொடர்ச்சியாக வந்த ஏமாற்றங்கள் மற்றும் கஷ்டங்கள் காரணமாகவே சினிமாவை விட்டு விலகி வீட்டிற்குள்ளே இருந்து வருகிறார். சில வருடங்களாகவே அவர் பற்றிய செய்திகள் பெரிய அளவில் இல்லாமல் இருக்கும் நிலையில் ஒரு சில யூடியூப்பர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கனகாவின் கடந்த கால வாழ்க்கையை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட நடிகை குட்டி பத்மினி தான் நடிகை கனகாவை நேரில் சந்தித்ததாகவும் அவரோடு ஐஸ்கிரீம் பார்லரில் ஒன்றாக அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டோம் என்று கனகாவோடு எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதே நேரத்தில் அவரிடம் கனகாவிடம் பேட்டி எடுங்கள் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கூறிவந்தனர். ஆனால் குட்டி பத்மினி அதற்கான முயற்சிகள் எடுத்த போது கனகா தரப்பிலிருந்து அவருக்கு ரெஸ்பான்ஸ் செய்யப்படவில்லை என்று குட்டி பத்மினி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை கனகா வெளியே சென்று விட்டு தன்னுடைய வீட்டு வாசலில் கதவை திறக்க நின்று கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக சென்ற ஒரு யூடியூப்பர் கனகாவை வீடியோ எடுத்து இருக்கிறார். அவரிடம் கனகா, என்னை எதற்காக வீடியோ எடுக்குறீங்க என்று கோபப்பட்ட போது மேடம் உங்ககிட்ட ஒரு இன்டர்வியூ கிடைக்குமா? என்று கேட்க, அதற்கு நான் என்ன ஆஸ்கார் அவார்டு வாங்கின நடிகையா? எதற்காக இப்படி பண்ணுறீங்க என்று அதட்டி இருக்கிறார்.

அதற்கு அந்த யூடியூப்பர் நீங்க உங்க செல்ஃபி போட்டோஸ், வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் போட்டு இருந்தீங்களே என்று சொல்ல, அதற்கு அப்படி போட்டால் உங்களுக்கு பேட்டி கொடுக்கணுமா என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் கனகாவை பல நாட்கள் கழித்து பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனாலும் அவருக்கு பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்ற போது எதற்காக இப்படி எல்லோரும் தொந்தரவு பண்ணி இருக்கிறார்கள். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தனியாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் கனகாவிடம் அவருடைய அனுமதி இல்லாமல் அவருடைய வீடியோக்களை வெளியிட்டு வருவது தவறு என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications