Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதறாத சொத்துக்கள்.. நடிகை கனகா கல்யாணம் செய்தது இவரையா? 15 நாள் வாழ்ந்த பரிதாபம்.. பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அன்பு காட்டவும், பாசம் காட்டவும், அரவணைத்து கொள்ளவும், ஆதரவு தரவும் யாருமே இல்லாவிட்டால், ஒருவர் அளவுகடந்த உச்ச வெறுப்பு நிலைமைக்கு சென்றுவிடுவார்கள்.. அவர்களின் மனநிலைமையே மாறிவிடும்.. மன அழுத்தமும் கூடிவிடும்.. இதற்கு உதாரணமாக நடிகை கனகா திகழ்ந்து வருகிறார்.. யாருமே தேவையிலலை என்ற மனநிலைமைக்கும் அவர் வந்துவிட்டார்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "தேவிகா-தேவதாஸ் தம்பதிக்கு நடுவே நிறைய தகராறுகள் வந்தன.. இதனால் இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.. பிறகு தேவிகாவின் மகள் கனகா சினிமாவில் நடிக்க வந்தார்.. முதல்படம் கரகாட்டக்காரன் ஒரு வருடம் ஓடியது.. அதற்குபிறகு நிறைய படங்கள் நடித்தார்..

Television Actress Kanaka Properties

ஒருநாள் திடீரென தேவிகா இறந்துவிட்டார். அதற்கு பிறகு, வீடு மட்டுமே தனக்கு உலகம் என்று கனகாவுக்கு ஆகிவிட்டது. அம்மா இருக்கும்வரை, அவர்தான் கனகாவுக்கு அனைத்தையுமே கவனித்து கொண்டிருந்தார். அதனால், கனகாவுக்கு வெளிஉலகமே என்னவென்று தெரியாமல் போயிற்று..

அப்போது தாயை இழந்து தவித்து கொண்டிருந்த கனகாவிடம் அனுதாபமாக, ஆதரவாக ஒருவர் பேசியிருக்கிறார்.. அனுசரணையாகவும், துணையாகவும் இருப்பதுபோல பேசியிருக்கிறார்.. கதிகலங்கி தவித்து கொண்டிருந்த நேரத்தில், அந்த நபரின் பாசத்திலும், அன்பிலும் கனகா விழுந்தார். அவரையே திருமணமும் செய்தார்.

நடிகையின் சொத்துக்கள்

ஆனால், அந்த நபரின் ஒட்டுமொத்த குறியும், சொத்துக்கள் மீதே இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் கனகா.. ஏற்கனவே வாழ்க்கையில் வெற்றிடம் உள்ள நிலையில்தான், அவரை திருமணம் செய்தார்.. ஆனால் அவரும் போலியாக இருப்பதை கண்டு ஏமாந்து போனார். அந்த ஏமாற்றத்தை கனகாவால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் திருமணமான 15 நாளிலேயே அந்த நபரை விட்டு பிரிந்துவிட்டார் கனகா.

இந்த நேரத்தில்தான் மகளுடன் நெருங்கி பேச ஆரம்பித்தார் அவருடைய அப்பா தேவதாஸ்.. ஆனால், அவரது எண்ணமும், கனகாவின் சொத்துக்கள் மீதே இருந்துள்ளது.. கனகா வாழந்து வரும் வீட்டை அபகரிப்பதிலேயே அவர் குறியாக இருந்துள்ளார்..

இதனால் உச்சக்கட்ட வெறுப்புக்கு சென்றார் கனகா.. அதற்கேற்றபடி, தேவதாஸும் மகளிடம் பேசுவதுபோல பாசமாக பேசமாட்டார்.. இதனால், யாரையுமே கனகா நம்புவதில்லை.. மன உளைச்சலில் தவிக்கும் மகளை அவருடைய அப்பாவே காப்பாற்றியிருக்கலாம்.. ஆனால், நல்ல அப்பா கனகாவுக்கு அமையவில்லை..

தலைவிரி கோலம்

அம்மா இறந்ததுமே சரியான ஆறுதல் சொல்லக்கூடிய அளவில் யாரும் இல்லை.. தன்னுடைய அம்மா வாழ்ந்து மறைந்த அந்த வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார்.. இறந்துபோன அம்மா அந்த வீட்டிலேயே வாழ்ந்து வருவதாகவும் கனகா நம்புவதாக தெரிகிறது. எனவே, அம்மாவின் ஆன்மாவுடன் அவர் பேசி கொண்டிருக்கலாம்.. இதனால் தன்னுடைய அம்மாவுடனேயே வாழ்ந்த திருப்தியும் அவருக்கு கிடைக்கலாம்.

தினமும் வீடியோவில் ஏதாவது படங்களை பார்த்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும் பொழுதை கழித்து வருகிறார்.. முன்பெல்லாம் அண்ணா மேம்பலம் அருகே உள்ள கேசட் கடைக்கு அடிக்கடி வருவார் கனகா.. தலைவிரி கோலத்துடன், சாதாரண டிரஸ் அணிந்து, அடையாளமே தெரியாமல் வருவார்..

அப்படியே கேசட் கடைக்கு வந்தாலும் அங்கும் யாரிடமும் பேசமாட்டார். என்னென்ன படங்களின் கேசட் தேவை என்பதை ஒரு பேப்பரில் எழுதி வைத்து வருவார்.. அந்த பேப்பரை நீட்டி, கேசட்டுகளை வாங்கி சென்றுவிடுவார். யாரிடமும் பேசமாட்டுர்.

இறந்துவிட்டதாக வதந்திகள்

இதற்கு பிறகுதான், நீண்ட காலம் கழித்து, குட்டி பத்மினி அவரை சந்தித்து, அந்த போட்டோ இணையத்தில் வெளியானது. இப்போதுகூட பேய் பங்களா மாதிரி அந்த வீட்டில் தனித்து வாழ்ந்து வருகிறார்.. அந்த வீட்டுக்குள் யாரும் வரவும் முடியாது, போகவும் முடியாது. ஆனால், கனகா இறந்துவிட்டதாக, அவருடைய அப்பாவே பலமுறை வதந்திகளை கிளப்பிவிட்டார்.. இதை கனகாவே பலமுறை செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பதையும் தவிர்த்துவிட்டார்.

யாருமே தேவையில்லை

யாருமே தேவையில்லை என்று நினைக்கிறார்.. யாராவது வீட்டுக்குள போனாலே சத்தம் போடுகிறார், துரத்துகிறார்.. அவருக்கு நம்பிக்கையானவர்கள், அன்பானவர்கள் அந்த வீட்டுக்குள் செல்வதாக தெரிகிறது.

ஆனால், அன்பு காட்டவும், பாசம் காட்டவும், அரவணைத்து கொள்ளவும், ஆதரவு தரவும் யாருமே இல்லாவிட்டால், ஒருவர் அளவுகடந்த உச்ச வெறுப்பு நிலைமைக்கு சென்றுவிடுவார்கள்.. அவர்களின் மனநிலைமையே மாறிவிடும்.. மன அழுத்தமும் கூடிவிடும்.. இதற்கு உதாரணமாக நடிகை கனகா திகழ்ந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+