குணசேகரன் நீங்க இல்லாதப்ப உங்க மனைவி ஈஸ்வரியை பாருங்க.. ஹரியுடன் என்னா குத்தாட்டம்
சென்னை: எதிர்நீச்சல் நடிகை கனிகாவும் ஹரிப்பிரியாவும் இப்படி குத்தாட்டம் போடுறாங்களே! குணசேகரன் பார்த்துப்புட்டா என்ன ஆவறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் எனும் சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நன்கு படித்த பெண்களை 3 அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
கனிகா மூத்த மருமகள், பிரியதர்ஷினி இரண்டாவது மருமகள், ஹரிப்பிரியா மூன்றாவது மருமகள். 3பேருமே படிப்பில் சுட்டி,கோல்டு மெடலிஸ்ட்கள். ஆனால் இவர்கள் மூவரையும் அவரது கணவர்கள் அடிமைகளை போல் நடத்துகிறார்கள்.

3 பெண்கள்
அந்த 3 பெண்களும் கணவருக்கும் மாமியார் சத்தியப்பிரியாவுக்கும் அஞ்சி அஞ்சியே வாழ்ந்து வருகிறார்கள். இந்தநிலையில்தான் 4-ஆவது மகனுக்கு மதுமிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர் இந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரானவராக இருக்கிறார்.

பெண்ணடிமைத்தனம்
பெரும்பாலான பெண்ணடிமைத்தனத்தை கேள்வி எழுப்பும் வகையில் நடந்து கொள்கிறார். இதனால் மூத்தவர் குணசேகரனின் கோபத்திற்கு ஆளாகிறார். இவரது திருமணத்தின் போதே மதுமிதாவை அவரது தோழிகள் நடனமாட அழைக்கிறார்கள். அவரும் டான்ஸ் ஆடுகிறார். இதற்கு குணசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

சர்ச்சை
இந்த சீரியலில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை வைத்து அண்மையில் நீயா நானா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மணமகள்கள் டான்ஸ் ஆடினால் என்ன தவறு என பெண்களும், அது தவறு என மாமியார் ஸ்தானத்தில் இருக்கும் பெண்களும் பேசிக் கொண்டிருந்தனர்.

நடிகர் மாரிமுத்து
இந்த நிகழ்ச்சியில் நடுவராக நடிகர் மாரிமுத்து வந்திருந்தார். அதாவது எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரன் வந்திருந்தார். ஒரு நிகழ்ச்சிக்கு சீரியல் நடிகரை நடுவராக அழைக்கும் அளவுக்கு குணசேகரனின் நடிப்பு மக்களை சென்றடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

ரா ரா ரெட்டி பாடல்
இந்தநிலையில் ஹரிப்பிரியா, கனிகா ஆகியோர் அவ்வப்போது வீடியோக்களை எடுத்து ரீல்ஸ் செய்து வருகிறார். அந்த வகையில் இருவரும் இணைந்து தெலுங்கு படமான மாசெர்ல நியோஜகவர்க்கம் என்ற படத்தில் வரும் ரா ரா ரெட்டி எனும் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டனர் கனிகாவும் ஹரிப்பிரியாவும். ஷூட்டிங்கின் போது ஜாலி மொமென்ட் என்று கூறி கனிகா வீடியோ போட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், குணசேகரன் இங்க பாருங்க, நீங்க இல்லாத நேரத்தில் உங்கள் மனைவி ஈஸ்வரியை பாருங்கள் என கலாய்த்துள்ளார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications