தெருநாய்கள் விவகாரம், டெல்லியில் நடக்கும் அநியாயம்! கோபத்தில் எதிர்நீச்சல் கனிகா கேட்ட கேள்வி! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தெருநாய்களை அப்புறப்படுத்துவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்து வரும் நடிகை கனிகாவும் அதற்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நாய்கள் மீதான ஆதரவுக்கும், அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கும் இடையே நடக்கும் விவாதங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

டெல்லி அரசின் திட்டம்
டெல்லியில் தெருநாய்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் அடைத்து வைக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தெருநாய்கள் மனிதர்களை கடிப்பதும், குழந்தைகளை தாக்குவதும் அதிகரித்ததால், அவற்றை அப்புறப்படுத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நடிகை கனிகாவின் வீடியோ
நடிகை கனிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், என்னை ஃபாலோ பண்ணும் எல்லோருக்கும் எனக்கு நாய்களே ரொம்ப பிடிக்கும் என்பது தெரிந்திருக்கும். அந்த நாய்களுக்காகத் தான் நான் இப்போது பேச போறேன். டெல்லியில் நடக்கும் அநியாயத்தை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. தெருவில் பிறந்து வளர்ந்த நாய்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அடைத்து வைப்பது எந்த வகையில் நியாயம்? அப்படி ஆயிரக்கணக்கான நாய்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து பாதுகாக்க முடியுமா? அது எவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்?.
நாம் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு நம்மை அப்புறப்படுத்தி ஊருக்கு ஒதுக்கு புறமாக அடைத்து வைத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதேபோல தானே அந்த நாய்களுக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும். "நாய் கடிக்கும் பிரச்சினை உண்மைதான். என் பையனை நாய் கடித்தால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு நாய் கடித்து விட்டால் அதற்காக மொத்த நாய் கூட்டத்தையும் அழிக்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார்.
உதாரணம்
மேலும் "நமது நாட்டில் பல கொடுமைகள் நடக்கிறது. குழந்தைகளை ரேப் செய்யும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் செய்யும் தவறுக்காக மொத்த ஆண்களுக்கும் தண்டனை கொடுத்தால் சரியா வருமா? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனிகாவைப் போலவே நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உட்பட பல பிரபலங்களும் தெருநாய்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
நாய்களுக்கு ஆதரவு
இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. விலங்குகளுக்கும் தான். நாய்கள் தாங்களாகவே எந்த தவறும் செய்வதில்லை. மனிதர்களின் வன்முறையும் உணவு கிடைக்காவிட்டால் ஏற்படும் பசியும் தான் அவற்றின் ஆக்ரோஷமான செயல்களுக்கு காரணம். சில மனிதர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் தண்டிப்பது எப்படி தவறோ, அதேபோல் ஒரு நாய் செய்யும் தவறுக்காக மொத்த தெருநாய்களையும் தண்டிப்பது தவறு. நாம் இந்த உயிரினங்களின் மீது அன்பு காட்டுவதுடன், ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிலர் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் எந்த தவறும் செய்யாமல் தெருவில் விளையாடும் குழந்தைகள் தாக்கும் நிலையில் அதனால் பாதிக்கப்படும் குடும்பத்தினர் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications