அப்போ புரியல இப்ப புரியுது.. சன் டிவி நடிகரோடு என்கேஜ்மென்ட்க்கு பிறகு நடிகை வெளியிட்ட பதிவு
சென்னை: ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை கண்மணி மனோகரனுக்கு நடிகர் அஸ்வத்துடன் என்கேஜ்மென்ட் முடிவடைந்தது. இந்த நிலையில் என்கேஜ்மென்ட்க்கு பிறகு கண்மணி "அப்போ புரியல... இப்ப புரிகிறது" என்று ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிப்பவர்கள் பலர் காதலித்து திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் பயணிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு தாங்கள் ஒன்றாக நடிக்கவில்லை என்றாலும் ஒரே துறையில் இருப்பதால் காதல் வந்து விடுகிறது. அது ரசிகர்களுக்கு திடீரென தெரிய வரும்போது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்த மாதிரி தான் சில வருடங்களுக்கு முன்பு ஷபானா மற்றும் ஆரியன் ஜோடியின் காதல் அறிவிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ஷபானா ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆரியன் அப்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்தி பரவியபோது அது வதந்தியாக இருக்கும் என்று பலர் கூறி வந்தனர்.
ஆனால் அது உண்மைதான் என்று இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். அதற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இப்போது மகிழ்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களைப் போலவே திடீரென ரசிகர்களுக்கு இன்னொரு சின்னத்திரை பிரபலங்களும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

அது வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடித்த நடிகை கண்மணி மனோகரன் தான். இவர் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது. அமுதாவாக பல சின்னத்திரை ரசிகர்களைக் கவர்ந்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
இவருக்கு அதிகமான இளைஞர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் சன் டிவியில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் அஸ்வத்துடன் கடந்த வாரத்தில் என்கேஜ்மென்ட் நடந்தது. அஸ்வத் சன் டிவியில் காலை வணக்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுபோல மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகனின் தம்பியாகவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் விருது வழங்கும் விழாக்கள், ரஞ்சிதமே நிகழ்ச்சி போன்ற பலவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர்களுடைய என்கேஜ்மென்ட் புகைப்படம் இணையத்தில் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் இவர்களின் என்கேஜ்மென்ட்க்கு பிறகு கண்மணியின் பிறந்த நாளை அஸ்வத் பிரம்மாண்டமாக கடற்கரையில் கொண்டாடியிருந்தார்

அது குறித்த புகைப்படங்களையும் அஸ்வத் பகிர்ந்து இருந்தார். இப்படியான நிலையில் இன்று கண்மணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்னு பதிவிட்டு இருக்கிறார். அதில் அஸ்வத் அண்ணா கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சவர்னு சிலர் சொன்னது அப்போ புரியல இப்போ புரியுது என்று கூறியிருக்கிறார்.
அதாவது இவர்களுடைய என்கேஜ்மெண்டில் அஸ்வத் கண்மணியின் இலையில் தண்ணீர் தெளித்து துடைத்துக் கொண்டிருப்பதும் அந்த நேரத்தில் கண்மணி அதை கவனிக்காமல் போனில் நோண்டிக் கொண்டிருப்பதையும் வைத்து பலர் இணையத்தில் கமெண்ட் போட்டதை வைத்து கண்மணி புது ரில்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பலர் சிரிக்கும் இமோஜிக்களை அவருக்கு ரிப்ளை கொடுத்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications