சன் டிவி வாய்ப்புக்காக விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி.. இனி இவருக்கு பதில் இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடித்து வந்த நடிகை கண்மணி மனோகரன் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகை வைஷாலி இணைந்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது புதியது ஒன்றுமில்லை. பல வருடங்களாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒரு சில சந்தர்ப்பங்களில் சில நடிகைகள், நடிகர்கள் விலகி விடுகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் வெண்ணிலா கேரக்டரில் அறிமுகமான நடிகை கண்மணி மனோகரன் அந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

இயக்குனர் பிரவீன் பென்னட் விஜய் டிவியில் ராஜா ராணி, பாரதிகண்ணம்மா போன்ற பல சீரியல்கள் இயக்கி இருக்கிறார். அந்த வரிசையில் மகாநதி சீரியலும் அவர்தான் இயக்கியிருக்கிறார். இந்த சீரியலுக்கு பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர். விஜய் டிவியில் எந்த ப்ரோமோ வந்தாலும் மகாநதி சீரியல் ப்ரோமோ எங்கே என்ற கேள்விகள் இல்லாத ப்ரோமோக்களே பார்க்க முடியாது.

television baakiyalakshmi serial vijay tv

மகாநதி சீரியலில் அடுத்தடுத்த பல திருப்பங்கள் இனி வர இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் காதலியாக வெண்ணிலா கேரக்டரில் நடிகை கண்மணி மனோகரன் இருந்தார். இவர் ஏற்கனவே பிரவீன் பென்னட் இயக்கிய பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அந்த சீரியல் முடிவடைந்த நேரத்தில் தான் மகாநதி சீரியலில் இவருடைய காட்சிகள் வந்தது. ஆனால் வெண்ணிலா உடைய பிளாஷ்பேக் கதை இன்னும் பெரிய அளவில் அந்த சீரியலில் வரவில்லை. அதற்குள் அவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவர் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ராகவி என்ற சீரியலில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதனால் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் மகாநதி சீரியலில் புதிய வெண்ணிலாவாக நடிகை வைஷாலி கமிட்டாகி இருக்கிறார். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களிலும் அவர் வில்லி கேரக்டரில் தான் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இனி இவரை வைத்து தான் விஜய், காவேரி இடையே பிரச்சனை வரும். ஏற்கனவே விஜய் காவிரியின் பிறந்தநாளுக்காக வெண்ணிலா இருக்கும் ஆசிரமத்திற்கு வந்திருக்கும் நிலையில் விஜயை பார்த்ததும் வெண்ணிலாவிற்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது.

அதுபோல இந்த சீரியலில் கதாநாயகியாக காவேரி கேரக்டரில் நடிக்கும் நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் வெண்ணிலாவும், காவிரியும் விஜயின் வீட்டில் இருந்து டான்ஸ் ஆடுவது போற்ற காட்சிகள் இருக்கிறது. இதனால் இனி வெண்ணிலா விஜய் வீட்டிற்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் சீரியலில் அடுத்த வாரத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+