திருமண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்.. எத்தனை பேர சீட் பண்ணுவ? திட்டி கமெண்ட் வெளியிட்ட நடிகை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த அகிலன் இன்று தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதற்கு அதிகமான நடிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திடீரென்று அவரோடு சீரியலில் நடித்த நடிகை வெளியிட்ட கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அகிலன் நடித்த பாரதிகண்ணம்மா சீரியல் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை கண்மணி மனோகரன் அகிலனின் திருமண புகைப்படத்திற்கு காட்டமான கமெண்ட் ஒன்று கொடுத்திருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சீரியலிலே அதிகமான முறை ட்ரெண்டிங்கில் இடம் பெற்ற சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்கும். இந்த சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும் பிறகு இதில் கண்ணம்மா கையில் பேக்கோடு வெளியே பல மாதங்களாக சுற்றிக் கொண்டிருந்ததை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.
டி என் ஏ டெஸ்ட் என்ற ஒன்றை மைய புள்ளியாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து வந்தாலும் இதற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். தொடர்ச்சியாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் பாரதியின் தம்பி அகிலன் கேரக்டரில் நடித்து வந்தவர்தான் அகிலன். ஆனால் இவர் பாதியில் சீரியலை விட்டு நிறுத்திவிட்டு சினிமாவில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் விஷாலின் தங்கையை காதலித்த நபராக இவர் நடித்திருந்தார். சினிமாவில் இவர் அடுத்தடுத்து வெற்றி பெறுவார் என்று ரசிகர்களும் கூறி வந்தனர். அதே நேரத்தில் அதிகமான திரைப்படங்களில் அவர் காணப்படவில்லை. இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் அகிலன் தற்போது தனது காதலியான அட்ஷயா முரளிதரனை திருமணம் செய்து அவருடன் எடுத்த திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அகிலனின் திருமணத்திற்கு அவரோடு பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்த ஃபரீனா, பாரதியாக நடித்த அருண் என பல பிரபலங்களும் தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த சோமு சேகர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அகிலனுக்கு ஜோடியாக அஞ்சலி கேரக்டரில் நடித்து வந்த கண்மணி மனோகரன், "இதுக்கு முன்னாடி எத்தனை பேரை சீட் பண்ணுன அதையும் மென்ஷன் பண்ண வேண்டியதுதானே? கொஞ்சம் கூட வெட்கம் இல்லல்ல..!?" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே அகிலன் வெளியேறி இருந்தார். இதனால் அகிலனுக்கும் நடிகை கண்மணி மனோகருக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்திருக்குமா? அதனால் தான் இப்படி கமெண்ட் போட்டு இருக்கிறாரா? அல்லது வேறு என்ன காரணமாக இருக்கும் என்று கேள்விகள் எழும்பி வருகிறது.
அதே நேரத்தில் நடிகை கண்மணி மனோகரன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கண்மணி இப்படி ஒரு கமெண்ட் கொடுத்திருப்பதால் அப்போ அகிலன் வேறு யாரையும் ஏமாற்றி இருந்தாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் கண்மணியே எதற்கு விளக்கம் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications