புது வீட்டில் கன்னிகா, சினேகனுக்கு ராஜ மரியாதை.. தடபுடலாக கறி விருந்து.. கடைசியில் தான் ஹைலைட்
சென்னை: நடிகை கன்னிகா தன்னுடைய கணவரோடு தான் கலந்து கொண்ட பங்க்ஷன் குறித்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அது அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
நடிகை கன்னிகாவும் பாடலாசிரியர் சினேகனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதல் பல வருடங்களாக தொடர்ந்து வந்தாலும் அதை ரகசியமாக வைத்திருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்ட பிறகுதான் இவர்களுடைய காதல் வெளியே தெரிய ஆரம்பித்தது.

அதற்குப் பிறகு சில வருடங்களில் இவர்களுடைய திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கன்னிகா தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரோடு தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதை பார்க்கும் பலரும் இந்த மாதிரி ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தான் கன்னிகா பலரும் பொறாமைப்படும் வகையில் தன்னுடைய குடும்பத்தோடு பல வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தோடு எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக தூங்கும் போது அவரவர்கள் செல்போனை மொத்தமாக ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு எல்லோரும் கதை பேசிய படியே தூங்கிக் கொண்டிருப்பது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அதற்கு பிறகு தன்னுடைய உறவினர்கள் எல்லோருக்கும் தானே சமைத்துக் கொடுக்கும் வீடியோக்களையும் அடிக்கடி கன்னிகா வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்போது தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரின் புது வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட வீடியோவை கன்னிகா வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
அந்த வீடியோவில் கன்னிகா மஞ்சள் நிற பட்டுபுடவையில் இருக்க, அவருடைய கணவர் சினேகனும் வேஷ்டி மற்றும் சட்டையில் எளிமையாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதோடு சினேகன் மற்றும் கன்னிகாவிற்கு அந்த வீட்டில் பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது இருவருடைய தலையிலும் பரிவட்டம் கட்டி மேளதாளத்தோடு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கறி விருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கன்னிகா "கடந்த 25 வருட நட்பு தந்த உறவு... இது உள்ளத்தால் சொந்தமான என் அன்பு அண்ணன் பாஸ்கரன் அவர்களின் இல்லத்தில் புதுமனை புகுவிழா..." என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் கன்னிகா சீரியலில் அறிமுகமாகி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
கன்னிகா சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற சீரியலில் மூலமாகத்தான் அறிமுகமாகி இருக்கிறார். அதற்குப் பிறகு வெள்ளி திரையிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாடல் அழகியாக பல பட்டங்களை பெற்ற கன்னிகா இவருடைய நீண்ட முடிக்கு "நீளமான தலை முடியை அழகாக பாதுகாப்பவர்" என்று இவருக்கு பட்டமும் கிடைத்திருக்கிறது. நடிகை மற்றும் மாடலாக மட்டுமல்லாமல் கிராமத்து சமையல்களில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை அப்படியே ஒரு புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான களரி, கம்பு சுற்றுதல் போன்றவற்றையும் முறையாக கற்று இருக்கிறார். அதோடு ஓவியம்,டான்ஸ் என்று எந்த துறையையும் விடாமல் அதில் கலக்கிக் கொண்டிருக்கும் கன்னிகா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தோடு அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications