"ஸ்வீட் எடு கொண்டாடு”மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போன கன்னிகா.. பல வருடம் கழித்து கிடைத்த சந்தோஷம்
சென்னை: நடிகை கன்னிகா தற்போது தான் மகிழ்ச்சியாக இருக்கும் செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த மகிழ்ச்சிக்கு காரணமாம்.
ஸ்வீட் பாக்ஸை கையில் எடுத்து காட்டியவாறு ரசிகர்களுக்கு நன்றிகளை சந்தோஷமாக கூறியிருக்கிறார்.

கன்னிகாவின் ஆரம்ப காலம்
கன்னிகா ரவி தமிழ் நடிகையாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் ஒரு விஜே வாக தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தீயா வேலை செய்யணும் குமாரு, சத்திரபதி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தலும் அவருக்கு அந்த வாய்ப்பு சிறப்பாக அமையவில்லை. கன்னிகா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் விருதுநகரில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாமே திண்டுக்கல் தானாம். கன்னிகா முதன்முதலில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

கிடைத்த முதல் வாய்ப்பு
முதல் சீரியலை தொடர்ந்து சபாஷ் சரியான சிரிப்பு என்ற நிகழ்ச்சியின் விஜேவாகவும் பணியாற்றியிருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. ஏற்கனவே இந்த சீரியலின் வேற ஒரு கேரக்டர் நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் பாதியிலே விலகிவிட இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்யாண வீடு சீரியல் இவருக்கு சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. இவருடைய நீண்ட முடி இவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது.

வித்தியாசமான கொண்டாட்டம்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா தற்போது தனக்கு இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியை தன்னுடைய ரசிகர்களுக்கு ஸ்வீட்டை காட்டி கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். அனைவருக்கும் ஸ்வீட் வழங்க இயலாது என்பதால் இவர் ஸ்வீட் பாக்சை மட்டும் காட்டி தன்னுடைய மகிழ்ச்சியை வித்தியாசமாக கொண்டாடியதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

மகிழ்ச்சியில் கன்னிகா
எல்லாரும் முதல்ல ஸ்வீட் எடுத்துக்கோங்க, எதுக்கு இந்த ஸ்வீட்னா ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு. எனக்கு இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் கிடைச்சிருக்கு. நான் எதிர்பார்க்கவே இல்லை .திடீர்னு சர்ப்ரைஸா என்னுடைய பேஜ் ஓபன் பண்ணி பார்க்கும் பது ப்ளூடிக் இருந்தது. ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது. அதை உங்கள் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இன்ஸ்டாகிராம் டீமுக்கு என்னுடைய ரொம்ப ரொம்ப பெரிய நன்றி .என்னை நேசிக்கிற என்னுடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எல்லாருக்குமே என்னுடைய ஹார்ட்ல இருந்து சொல்றேன் ரொம்ப ரொம்ப நன்றி. உங்க எல்லாருடைய லவ்வும் ப்ளஸ்ஸிங் எப்போதும் போல எங்க இரண்டு பேருக்கும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கன்னிகா அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications