வீட்டை விட்டு கிளம்ப பேக்கிங் செய்த கன்னிகா.. சினேகன் கொடுத்த பரிசு.. நெகிழ்ச்சியாக வெளியிட்ட பதிவு
காதலர் தின பரிசாக கன்னிகா தனக்கு சினேகன் பரிசு கொடுத்ததை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை கன்னிகா தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
காதலர் தினத்துக்கு தன்னுடைய காதல் கணவர் கொடுத்த திடீர் பரிசு தன்னை எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக மாற்றியது என ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா வெளியிட்ட இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ரகசியமாக வைத்த காதல்
திரைத்துறை தம்பதிகளாக இருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் பல வருடங்களாக காதலித்து தங்களுடைய காதல் வெளியே தெரியாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வைத்து, பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். பாடல் ஆசிரியராக இருக்கும் சினேகன் நடிகையாக இருக்கும் கன்னிகா ரவியை காதலிக்கும் காலங்களில் வெளியே எங்கும் சுற்றாமல் தங்களுடைய நெருங்கிய நண்பர்களுக்கு கூட இவர்களுடைய காதல் ரகசியம் தெரியாத வகையில் தான் வைத்திருக்கின்றனர். திருமணமானாலும் தங்களுடைய காதல் என்றும் மாறாது என்று இவர்கள் அடிக்கடி நிரூபித்து வருகின்றனர்.

பல திறமைகள்
சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி காதலிக்கும் செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியான நேரத்தில் இவர்களுடைய காதல் பற்றி பல நெகடிவ் கருத்துகள் வெளியானது. இருவருக்கும் அதிகமான வயது வித்தியாசம் இருப்பதால் இவர்களால் நீண்ட நாட்கள் திருமண வாழ்க்கையில் நிலைத்து இருக்க முடியாது என்றும், இது கன்னிகா அவசரப்பட்டு எடுத்த முடிவு என்றும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத கன்னிகா மற்றும் சினேகன் இப்ப வரைக்கும் அவர்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவே கொண்டு செல்கின்றனர். நடிகை கன்னிகா அழகி பட்டம் பெற்றவராகவும், ஒரு புத்தக எழுத்தாளராகவும், சமையல் ஆர்வலராகவும், சிலம்பாட்டம் தெரிந்தவராகவும், ஒரு ஓவியராகவும் பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்திருக்கிறார்.

குழந்தை பற்றிய கேள்வி
தனக்கு தெரிந்த கலைகளை அடிக்கடி சமூக வலைதளத்தில் வீடியோக்களாக வெளியிட்டு, பலரையும் இதை பின்பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேசிய ஒரு வீடியோவில் இவர் பேசுகையில் திருமணம் முடிந்ததுமே பலரும் குழந்தை பற்றி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் திருமண விஷயத்தில் எடுத்திருக்க முடிவை பற்றி அடுத்தவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வெளியே செல்லும் இடம் எல்லாம் குழந்தை எப்போ என்று இரண்டு மாதம் இருக்கும்போது இருந்தே தொடங்கிய கேள்வி இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது வருத்தமாக இருக்கிறது என்று பகிர்ந்து இருந்தார்.

சர்ப்ரைஸ் கிப்ட்
அதுமட்டுமில்லாமல் காதலர் தினத்தில் தன்னுடைய கணவருக்கு காலில் மெட்டி அணிவித்து, தன்னுடைய காதலை வித்தியாசமாக கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிளம்புவதற்காக பேக்கிங் வீடியோ எடுக்கலாம் என்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கன்னிகாவுக்கு சினேகன் டிரஸ் மடித்து கொடுப்பது போல பக்கத்தில் வந்து, தான் வாங்கி வைத்திருந்த வாட்சை காதலர் தின பரிசாக கொடுக்க, அதை பார்த்து கன்னிகா இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கிப்ட் விட உங்க அன்பு பெருசு என்று சினேகனை டேக் செய்து நேரம் விலை மதிப்பில்லாதது என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து இந்த காதல் எப்போதும் தொடர வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications