Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னொரு உயிர் வரப்போகுது.. கண்ணீரோடு மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த கன்னிகா சினேகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடலாசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி தாங்கள் அப்பா, அம்மா ஆக போவதாக மகிழ்ச்சி செய்தியை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். இதற்குச் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

சினிமா திரையில் ஒரு சில தம்பதிகள் பலரையும் வியக்க வைக்கும் அளவிற்கு வாழ்ந்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி இவர்கள் இருவரும் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று தங்களுடைய ஏழு வருட காதலை மறைத்து வைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் இவர்கள் காதல் செய்தது சினிமா வட்டாரத்தில் பலருக்கும் தெரியாது.

kannika ravi snehan

கன்னிகா விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கிராமத்தில் இருந்து சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்திருந்த நிலையில் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப் பரிசு சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். திரைப்படத்தில் கதாநாயகியாக வேண்டும் என்று இவர்களுடைய காதலை வெளியே சொல்லாமல் இருந்தனர்.

அந்த நேரத்தில் சினேகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவதாக சொல்லி இருந்தார். ஆனால் அப்போது கூட யார் அவர் என்பது பற்றி சொல்லவில்லை. ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பிறகு பல ஹிட் பாடல்களுக்கு சினேகன் வரிகள் எழுதி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களிலிருந்து இப்ப வரைக்கும் நாம் முணுமுணுக்கும் பல பாடல்களை எழுதியது சினேகனாக தான் இருக்கும்.

ஆனாலும் அது இவர்தான் எழுதியது என்றே பலருக்கும் தெரியாது. அதை தெரிய வைக்கும் விதமாகத்தான் கன்னிகா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் போடும் ரிலீஸ் வீடியோக்களில் இந்த பாடலை எழுதியது சினேகன் என்று குறிப்பிட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் சினேகன் மற்றும் கன்னிகாவின் காதல் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததுமே இணையத்தில் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானார்கள்.

சினேகனை விட கன்னிகா வயதில் குறைந்தவர் இதனால் பலரும் இவர்களுடைய திருமண வாழ்க்கை பல வருடங்கள் நிலைக்காது, வயதானவரை கன்னிகா திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் கலாய்த்து வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பெரிய அளவில் சினேகன் வெளியே தெரியாமல் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரிடமும் இணக்கமாக பேசியது.. பிறகு அவருடைய கட்டிப்பிடி வைத்தியம் பெரிய அளவில் இவரை பிரபலமாக்கியது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் தலைமையில் பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் முடிந்தது. அது குறித்து கன்னிகா மற்றும் சினேகன் தெரிவிக்கையில் நாங்கள் ஏழு வருடங்களாக காதலித்து வந்தோம் ஆனால் ஒருமுறை கூட நாங்கள் இருவரும் வெளியே ஒன்றாக சுற்றியது கிடையாது. ஏதாவது பேச வேண்டும் என்றால் கூட ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் காரில் பயணித்தபடியே தான் பேசிக் கொள்வோம்.

பிறகு யாருக்கும் தெரியாமல் நாங்கள் பிரிந்து சென்று விடுவோம். அதனால் எங்களுடைய காதல் வெளியே தெரியாமல் இருந்தது என்று கூறியிருக்கிறார்கள். அது போல திருமணம் முடிந்து இவர்கள் 4வது திருமண நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் பலரும் குழந்தை எப்போது என்று கேள்விகளை எழுப்பி வருவதால் இது இவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கன்னிகா சில பேட்டிகளில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் பல நாள் ஏக்கம் இன்று நிறைவேறி இருப்பதாக கன்னிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கண்ணீரோடு தெரிவித்து இருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தன்னுடைய கணவருக்கு முதல் முறையாக சொல்லும் போது சினேகன் எமோஷனல் மற்றும் சந்தோஷமடைந்ததை வீடியோவாக கன்னிகா பகிர்ந்து இருக்கிறார். அதோடு "நாங்க அப்பா, அம்மா ஆக போறோம். உங்கள் எல்லாருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்" என்று அவர் வேண்டி இருக்கிறார். இவருக்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+