Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழையில் அந்தப் பிரச்சினையில் தவித்த நடிகை கௌசல்யா..விஜயகாந்த் செய்த உதவி.. பிரபலம்னு கூட பாக்கலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கௌசல்யா தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் மற்றும் பல வருடங்களாக தான் சினிமாவில் எதனால் நடிக்கவில்லை என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதோடு அந்த பேட்டியில் நடிகர் விஜயகாந்த் பற்றியும் அவரைத்தான் நேரில் பார்த்தால் என்ன வார்த்தை கேட்பேன் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

Actress Kaushalya has spoken about how Vijayakanth helped reason

தான் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட இக்கட்டான பிரச்சனையில் விஜயகாந்த் தனக்கு எவ்வாறு உதவி செய்தார் என்பது பற்றி கௌசல்யா பேசியிருக்கும் நிலையில் இதற்கு பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் சமுதாயத்தில் பலருக்கும் பரிட்சயமாகி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகாந்த் 2கே கிட்ஸ்களுக்கு பெரிய அளவில் தெரியவில்லை என்று சொல்ல முடியாது. அரசியல் பிரமுகராக மட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்த் குறித்து பல முன்னணி நடிகர்கள் அனைவருமே தங்களுக்கு அவர் செய்த உதவி குறித்து தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அது குறித்து தெரிய வரும்போது இவருக்குள் இவ்வளவு குணங்கள் இருக்கிறதா? என்று விஜயகாந்த் பற்றி சரியாக தெரியாதவர்கள் கூட அதிசயப்பட்டு போவார்கள். அந்த அளவிற்கு எந்த நடிகரும் குறையே சொல்லாத வகையில் நடிகர் விஜயகாந்த் பற்றி பல்வேறு பிரபலங்கள் தொடர்ச்சியாக விஜயகாந்த் செய்த உதவி மற்றும் அவருடைய பண்புகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதிகமானோர் பணம் சம்பாதித்து பிரபலம் அடைந்த பிறகு மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் தான் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கூட பலருக்காக மனப்பூர்வமாக செலவழித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் விஜயகாந்த். அவருடைய வீட்டில் எப்போதும் சமையல் செய்யப்பட்டு கொண்டே இருக்கும். அவரை பார்க்கப் போகுபவர்கள் பலர் வயிறார சாப்பிடலாம் என்றெல்லாம் அவரால் பலன் பெற்ற பலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல சினிமா நடிகர்கள் யாருக்கேனும் ஒரு பிரச்சனை என்றால் விஜயகாந்திடம் போனால் அதற்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்றும் பல நடிகர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை கௌசல்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் விஜயகாந்தை இப்போது நேரில் பார்த்தால் என்ன சார் இப்படி ஆகிட்டீங்க என்றுதான் கேட்பேன்.

Actress Kaushalya has spoken about how Vijayakanth helped reason

ஏனென்றால் நான் பார்த்த விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் நடித்த வானத்தைப்போல திரைப்படத்தில் நான் அவருக்கு உடன் இணைந்து நடிக்கும் போது எங்களை எல்லாம் அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். ஒருமுறை நான் இரவு காரில் வந்து கொண்டிருக்கும்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ரோட்டில் என்னுடைய கார் பஞ்சர் ஆகி நின்று விட்டது. டிரைவர் கூட டயர் மாத்த முடியாது என்று சொல்லிவிட்டார்.

அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்த விஜயகாந்த் உடனே என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டார். நான் சொன்னதும் அவரே காரில் இருந்த ஸ்டெப்னி டயரை எடுத்து பஞ்சரான டயரை மாற்றி என்னை அங்கிருந்து போக வைத்தார். இந்த மாதிரி குணம் யாருக்கும் வராது. அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போதும், அவர் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. விஜயகாந்த் எப்போதுமே யாராலும் குறை சொல்ல முடியாத நபர் என்று நடிகை கௌசல்யா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை தற்போது பாதிக்கப்பட்டு இருப்பது அவரை விடவும் அவர்களுடைய ரசிகர்கள் பலருக்கும் வேதனையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களிலும் ரியல் லைஃபிலும் நிஜக் ஹீரோவாக வந்து கொண்டிருக்கும் விஜயகாந்த் உடல்நல பிரச்சனை சீக்கிரமாக சரியாக வேண்டும் என்று பலர் தொடர்ச்சியாக அவருக்காக வேண்டுதல்களை வைத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+