Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

90களில் பிரபலமான நடிகை கவிதாவின் சோகமான மறுப்பக்கம்.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான கவிதாவின் சோகமான மறுபக்கம் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

வெள்ளித்திரையில் இருந்து தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கவிதாவின் வாழ்க்கை மறுபக்கம் பலருக்கும் தெரியாத சோகங்களை உள்ளடக்கியுள்ளது.

90களில் பிரபலமான நடிகை

90களில் பிரபலமான நடிகை

என்ன தான் திரைப்படங்களில் மகிழ்ச்சியாக தங்களை வெளிக் காட்டிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் சோகம் பெரியது என்பது தற்போது நடிகை கவிதாவின் வாழ்க்கையைப் பார்த்து ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்கள். ஒரு சிலருக்கு தான் வாய்ப்பு கிடைத்து திரைப்படங்கள் மட்டும் சின்னத்திரைகளில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கவிதாவும் ஒருவர். கவிதா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என போன்ற மொழிகளில் 350க்கும் க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் அறிமுகம்

சின்னத்திரையில் அறிமுகம்

கவிதா தன்னுடைய பதினோராவது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் 1976 ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற ஒரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். அதே ஆண்டில் ஸ்ரீ ஸ்ரீ மூவா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் சினிமா நடிகைகள் நீண்ட ஆண்டுகள் சினிமாவில் நடிப்பது கிடையாது. ஒரு சிலருக்கு தான் அந்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பலர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து விடுகிறார்கள். அந்தவகையில் கவிதாவும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை மூலமாகவும் தனது நடிப்பை வெளிக் காட்டி வருகிறார்.

சோகமான மறுபக்கம்

சோகமான மறுபக்கம்

சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா, நந்தினி போன்ற சீரியல்களில் கவிதா நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை என்ற சீரியலில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை காட்டி வருகிறார். இவர் கேமராவுக்கு முன்னாடி தான் தன்னுடைய கெத்தான கேரக்டரை காட்டி கொண்டிருக்கிறாரே தவிர இவருடைய சொந்த வாழ்க்கையில் பல சோகமான நிகழ்வுகள் தான் நிகழ்ந்துள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நெருங்கிய உறவுகளை பலர் இழந்திருக்கின்றனர். அந்த வகையில் கவிதாவும் ஒருவர். இவர் தன்னுடைய மகன் மற்றும் கணவர் இருவரையும் இந்த கொரோனா காலகட்டத்தில் இழந்திருக்கிறார்.

சோகத்தை மறப்பதற்காக செய்யும் செயல்

சோகத்தை மறப்பதற்காக செய்யும் செயல்

தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் என்னதான் பிசியாக இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தான் இருந்து வருகிறார். இது பல ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தாலும் இவருடைய சோகமான மறுபக்கத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் பலர் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இவர் வில்லியாக நடிக்கும் என்றென்றும் புன்னகை சீரியலை பார்த்த பலர் இவரை திட்டி தீர்த்தாலும் இவருடைய உண்மையான சூழ்நிலையை புரிந்து கொண்ட ரசிகர்கள் இவர் வெளியே செல்லும் இடங்களில் இவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்களாம். கவிதாவும் தன்னுடைய சோகத்தை மறைப்பதற்காக நடிப்பில் கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+