Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீர்த்தி சுரேஷ் மறைத்து வைத்த ரகசியம் இப்போது உடைந்தது! விரைவில் குட் நியூஸ்! குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சமீபத்தில் தான் திருமணமானது. திருமணத்திற்கு பிறகு அவர் மறைத்து வைத்த விஷயம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Keerthy Suresh

கடந்த வருடத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய திடீர் திருமணத்தை அறிவித்திருந்தனர். அதில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். 15 வருடங்களாக காதலித்து வந்த அந்தோணி தட்டில் என்பவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னை பற்றி பரவி வந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்திருந்தார். அதுபோல கீர்த்தி சுரேஷ் திருமணம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Keerthy Suresh

கீர்த்தி சுரேஷ் திருமணம்

இந்த திருமணத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்ற போது அதில் இயக்குனர் அட்லி உட்பட ஒரு சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தன்னுடைய சினிமா பிரமோஷனுக்கு கீர்த்தி சுரேஷ் கிளம்பிவிட்டார்.

Keerthy Suresh

ரீமேக் திரைப்படம்

அதுவும் கழுத்தில் மஞ்சள் கயிற்றுடன் அவர் மாடர்ன் உடை அணிந்து வெளியான புகைப்படங்கள் அதிக விமர்சனங்களை சந்தித்தது. அதுபோல கீர்த்தி சுரேஷ் கோலிவுட்டை விடவும் பாலிவுட்டில் தான் பிசியாக இருக்கிறார். போன வருஷத்தில் பேபி ஜான் என்ற திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். பேபி ஜான் திரைப்படம் நடிகர் விஜய் தமிழில் நடித்து ஹிட் அடித்து தெறி திரைப்படத்தின் ரீமேக் தான்.

Keerthy Suresh

பாலிவுட்டில் என்ட்ரி

இந்த திரைப்படத்தை அட்லீ தான் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக வருண் தவானும் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் படும் தோல்வியை அடைந்தது. பேபி ஜான் திரைப்படம் தோல்வியடைந்தாலும் கீர்த்தியின் நடிப்பை பார்த்து வியந்த பாலிவுட் தயாரிப்பாளர் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.

Keerthy Suresh

மஞ்சள் தாலி

அதுபோல அக்கா என்ற வெப் சீரிஸிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு மஞ்சள் தாலியில் பரபரப்பு ஏற்படுத்தியது போல அக்கா திரைப்படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தங்க சங்கிலியோடு வலம் வந்ததும் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த வெப் தொடர் விரைவில் netflix தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Keerthy Suresh

அடுத்த ஜாக்பாட்

அதற்கான டீசர் வெளியீட்டு விழாவில் மார்டன் உடையில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு இருந்தார். இந்த வெப் சீரிஸ் வரலாற்று கதை அம்சம் கொண்டதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அது போல கீர்த்தி சுரேஷுக்கு இன்னொரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் பாலிவுட்டில் தான். அவர் இந்தியில் உருவாகும் ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம்.

Keerthy Suresh

மறைத்து வைத்த ரகசியம்

ஆனால் இதைப் பற்றி கீர்த்தி சுரேஷ் இதுவரைக்கும் வெளியே சொல்லாமல் அமைதியாக மறைத்து வைத்திருக்கிறார். அவர் பாதுகாத்த இந்த விஷயம் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் யார் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்கள்? அந்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் உறுதி செய்யாமல் இருக்கும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை கீர்த்தி சுரேஷ் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Keerthy Suresh

கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிக்கும்போது ஹோம்லியாக நடித்தாலும் இப்போது பாலிவுட்டில் மாடர்ன் உடையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் மீண்டும் தமிழில் பழையபடி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

Keerthy Suresh
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+