Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீர்த்தி சுரேஷின் முகத்தில் கவனிச்சீங்களா? நடிகை செய்த மிஸ்டேக்.. நம்ப முடியல! நிபுணர்கள் சொல்வதென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடை குறித்து பேசும்போது, நான் மிகவும் குண்டாக இருந்தேன். கொஞ்சம் பருமனாக இருந்தேன்... அதுக்காக கொழுப்பாக இருந்தேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால், வலிமை பயிற்சி இல்லாமல், நான் கார்டியோ செய்தேன்.. இதனால் 9 கிலோகிராம் எடை இழந்தேன் என்று என்று கூறியிருக்கிறார்.. அத்துடன் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றையும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.. கார்டியோ பயிற்சி குறித்து மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பதென்ன?

இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக திகழ்ந்தார்..

Television Actress Keerthy Suresh weight loss

பிறகு திடீரென கீர்த்தி சுரேஷ் வித்தியாசமாக காணப்பட்டார்.. கடந்த 2018ல் இருந்த தோற்றத்துக்கும், 2020-ல் காணப்பட்ட தோற்றத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.. மிகவும் ஒல்லியாக இருந்தார்..

கீர்த்தி சுரேஷூக்கு என்ன ஆச்சு?

கீர்த்தி சுரேஷூக்கு என்ன ஆச்சு? உடல்எடை குறைய ஆபரேஷன் செய்தாரா? உடலில் வேறு ஏதாவது நோய் பாதிப்பா? கடுமையான டயட்டில் இருக்கிறாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் கிளம்பின.. ஆனால், உணவுமுறை எதுவும் பின்பற்றாமல், கடும் உடற்பயிற்சியையும் செய்யாமல் உடல்எடையை குறைத்ததாக கூறியிருந்தது பலருக்கும் வியப்பை தந்தது.

இதுகுறித்து அப்போது கீர்த்தி சுரேஷ் சொன்னபோது, "எனக்கு உடற்பயிற்சியில் பெரிதாக ஆர்வம் கிடையாது.. மகாநதி படம் முடிந்ததுமே, உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்... ஆனால், சினிமாவில் வந்ததிலிருந்தே உடல் எடையில் கவனம் பெரிதும் கவனம் செலுத்தவில்லை என்பதால், திடீரென உடற்பயிற்சியில் இறங்கியது சற்று கடினமாக இருந்தது..

மகாநதி ஒரிஜினல் எடை

என்னுடைய உடலை பற்றி புரிந்து கொள்வதற்கே நேரம் பிடித்தது.. மகாநதி படத்திற்கு பிறகே எடையை குறைக்க ஆரம்பித்தேன். அந்த படத்தில் நடிக்க எடையை ஏற்றவில்லை. அதுதான் என்னுடைய ஒரிஜினலான உடல் எடையாகும்.. அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ததாக நினைக்கிறேன்.

மகாநதி படத்திற்கு படம் முடிந்து, 6 மாதத்துக்கு படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தேன்.. அப்போதுதான், ஆரோக்கியமான எடையில் இருக்க வேண்டும் என கருதி எடை இழக்கும் முயற்சியில் இறங்கினேன்..

கார்டியோ பயிற்சிகள்

ஆனால், ஜிம் செல்வது எனக்கு பலனை தரவில்லை.. அதுக்காக ஆபரேஷனும் செய்யவில்லை. வெறும் கார்டியோ பயிற்சி செய்தே என்னுடைய தசையை இழந்து ஒல்லியாக தெரிந்தேன். யோகா செய்த பிறகு உடல் எடை சீராகிவிட்டது.. இப்போது வாரத்திற்கு 6 நாட்கள் பயிற்சி செய்கிறேன். உடல் வலிமைக்காக Strength training செய்வேன். எப்போதுமே நான் டென்னிஸ் விளையாடுவேன்.. ஸ்விம்மிங் கிளாஸ் போவேன்.

மற்றபடி எந்த டயட்டையும் நான் பின்பற்றியது கிடையாது. எனக்கு எதை சாப்பிட வேண்டுமோ அதை சாப்பிட்டு விடுவேன். புரோட்டீனுக்காக முட்டையின் 8 வெள்ளை கரு, பனீர், சோயா, பருப்பு வகைகள் சாப்பிடுவது உண்டு. உடற்பயிற்சி செய்த பிறகு புரோட்டீன் ஷேக் குடித்தது கிடையாது" என்றெல்லாம் கூறியிருந்தார்.


தசைகள் வலிமை

இந்நிலையில், கடந்த 2018-19 காலகட்டத்தில் உடல் எடை குறைந்து குறித்து, தற்போது பிரபல வெப்சைட் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்..

அதில், "நான் அப்போது மிகவும் குண்டாக இருந்தேன். வெயிட் குறைப்பதற்காக கார்டியோ பயிற்சிகள் (cardio) மட்டும் செய்தேன். ஆனால், அதனுடன் சேர்த்து, தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகளை (strength training) செய்யவில்லை. வெறும் கார்டியோ மட்டுமே செய்ததால், என் உடல் எடை வேகமாக குறைந்தது. அதனால், தசைகளும் குறைந்தன.

சுமார் 8, 9 மாதங்களில் கிட்டத்தட்ட 8 கிலோ எடை குறைந்தது.. இதனால் என்னுடைய முகம் ஒல்லியாக மாறியது. 2019ல் எடுத்த போட்டோக்களை பார்த்தால், என் முகமும் மெலிந்துள்ளது தெரியும்..

முறையான உடற்பயிற்சி

ஆனால், நான் என் வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்யவில்லை. நான் தூங்கிக்கொண்டிருந்தேன், சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், வேலை செய்து கொண்டிருந்தேன், வீட்டிற்குத் திரும்பி வந்து மீண்டும் தூங்கிக்கொண்டிருந்தேன், எனக்கு கிடைத்த ஓய்வில் தான் உடற்பயிற்சி செய்தேன்.. அது ஆரோக்கியத்திற்கு நல்லதா? கிடையவே கிடையாது.

இப்படி வேகமாக எடை குறைந்தாலும், அதனால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட்டன.,. உடல் நலம் மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, ஆரோக்கியமான முறையில் எடையை பராமரிப்பதே சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் சொல்வதென்ன?

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடல் எடை குறைப்பது குறித்து கூறும்போது,
வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் போன்றவைகளுக்குதான், கார்டியோ உடற்பயிற்சிகள் என்று பெயர்.. இதனால் கலோரி எரிக்க முடியும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால், ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் இல்லாமல் அதிக அளவில் கார்டியோ செய்வது தசை குறைவுக்கு காரணமாகும். தசை அளவு குறைந்தால், மெட்டபாலிசம் வேகம் குறைந்து, உடல் வலிமையும் விரைந்து குறைந்துவிடும்.. எனவே, வாரம் குறைந்தது 3 நாட்கள் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் செய்ய வேண்டும்.. தசை வலிமையை அதிகரிக்க, ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங் உதவியாக இருக்கும்.

வாரத்தில் 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர கார்டியோ பயிற்சி அல்லது 75 முதல் 150 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவைகளுடன் எடைப்பயிற்சியும் சேர்த்துக் கொண்டால் போதும். வயது, தசை அளவு, தினசரி செயல்பாடுகள் போன்ற பல அம்சங்கள் கலோரி எரிப்பு அளவை பாதிக்கும் என்றும் ஆண்கள் பெண்களை விட அதிக கலோரிகளையும் வேகமாகவும் எரிக்கிறார்கள் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+