நெப்போலியன் மகன் திருமணத்திற்கு பிறகு குஷ்பூ போட்ட போஸ்ட்.. இதெல்லாம் வெளியே தெரியாது என நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை குஷ்பூ நெப்போலியன் மகன் மற்றும் மருமகள் குடும்பத்தை பற்றி நெகிழ்ந்து ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். இதற்கு இணையத்தில் அதிகமானோர் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
சிலரை பார்க்கும்போது இவர்கள் இப்படித்தான் என்று ஒரு பின்பம் மனதிற்குள் பதிந்துவிடும். ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் கிடையாது என்று இன்னொருவர் சொல்லும் போதோ அல்லது அவர்களைப் பற்றிய உண்மைகள் வெளியே தெரியும் போது தான் இவரா இப்படி என்று எல்லோரையும் சொல்ல வைக்கும்.

அதுபோல்தான் வில்லனாகவும், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்த நெப்போலியன் பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார். ஆனால் நேற்று அவருடைய மகன் கல்யாணத்தில் அவரையும் மீறி கண்கலங்கி அழுத வீடியோ நேற்றிலிருந்து இணையத்தில் பலருடைய மனதையும் கவர்ந்து வருகிறது. நெப்போலியன் மீசையை முறுக்கிக் கொண்டு எந்த இடத்திலும் கணீர் என்ற குரலோடு பேசுபவர் தான். ஆனால் தன்னுடைய குடும்ப விஷயத்தில் அவர் ரொம்பவும் சென்டிமென்டான ஆளு என்று பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.
நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கு நான்கு வயதில் இருந்தே தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 10 வயதிற்கு மேலே அவரால் நடக்க முடியாத சூழ்நிலை வந்தது. ஆனாலும் தன்னுடைய மகன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தன்னுடைய மகனின் வாழ்க்கையை அடிக்கடி பேட்டிகளில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதுபோல தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, இது ஒரு நோய் மட்டும்தான் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட நெப்போலியன் பேசியிருக்கிறார். தன்னுடைய மகனைப் போல தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருநெல்வேலியில் மயோபதி மருத்துவமனையையும் கட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு வாழ்க்கைத் துணை தேவை என்று அவர் நேற்று திருநெல்வேலியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு தன்னுடைய மகனுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார். இது இணையத்தில் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனால் சிலர் இந்த திருமணத்தை விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெப்போலியன் உடன் பல படங்களில் நடித்த அவருடைய தோழியான குஷ்பூ இந்த திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வீடியோவை பகிர்ந்து ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

அதில், நல்லவர்களுக்கு நல்லது நடக்கும் போது குடும்பத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மற்றும் அழகான ஆத்மாக்களின் அழகான சங்கமத்திற்கு சாட்சியாக இருந்தது. தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு மகிழ்ச்சியான திருமண வாழ்த்து. அவர்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும் இறைவன் அருளட்டும்.
நெப்போலியனும் அவரது மனைவி சுதாவும் இது போன்ற மகிழ்ச்சியான நேரங்களுக்கு தகுதியானவர்கள். இன்னும் சுயநலமற்றவர்களாகவும், பலருக்கு கொடுப்பவர்களாகவும் எப்போதும் அவர்களைப் போல உதவி செய்யும் தம்பதிகளாகவும் பார்க்க வேண்டும் என்று பெற்றோர் என்ற முறையில் நான் உறுதி அளிக்கிறேன்.
நெப்போலியனும் அவருடைய மனைவியும் மற்றவர்களைப் போல அல்ல. பலருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் நீங்கள் என் சிறந்த நண்பர்களாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன். மேலும் நீங்கள் ஒரு அற்புதமான சகோதரராக இருந்தீர்கள் என்று நெப்போலியனின் இரண்டு மகன்கள் மற்றும் மனைவி குறித்து பெருமையாக குஷ்பூ போஸ்ட் போட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான கமெண்டுகள் குவிந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications