3 கல்யாணம் பண்ண 3 எழுத்து நடிகை.. உல்லாச வாழ்வுக்காக எல்லை மீறி.. பரவிய கிரணின் போலி வீடியோ: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வீடியோவை உண்மையா இல்லையா என தெரியாமல் பகிர்வது அல்லது பதிவிறக்கம் செய்வது சட்டப்படி குற்றமாகும். தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். அந்த வீடியோவை ரிப்போர்ட் செய்யுங்கள், ரீ-போஸ்ட் செய்யாதீர்கள் என்று நடிகை கிரண், 4 நாட்களுக்கு முன்பு தன்னுடைய வீடியோ பரப்பப்பட்டது குறித்து பேசியிருந்தார். அத்துன், மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ குறித்து போலீசிலும் புகார் தந்திருந்தார். இதுகுறித்து சினிமா விமர்சகர் ராஜகம்பீரன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

King Voice என்ற யூடியூப் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய பெண்களுக்கு, சிலர் ஆகாதவர்களாக, பிடிக்காதவர்களாக இருப்பார்கள்.. அதுபோன்றவர்கள்தான், இதுபோன்ற மார்பிங் செய்து, ஆபாச வீடியோக்களை ஷேர் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை சைபர் கிரைம் போலீசாராலும் உடனடியாக கண்டுபிடிக்க முடிவதில்லை..

Television Actress Kiran Kiran Rathore

அதனால்தான், புகார் அளிக்கப்படும்போது மட்டும் இதுபோன்ற குற்றங்கள் பேசப்படுகின்றன.. மற்ற நேரங்களில் அந்த புகார்கள், அந்த வழக்குகள் என்ன ஆகின்றன என தெரிவதில்லை. நடிகைகள் என்றில்லாமல் பல பெண்கள் , ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகார்களை தந்தும், போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.. அதற்காக போலீசார், அவைகளை புறக்கணிக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

சம்பளமும் குறைவு

இதில் கிரணை பொறுத்தவரை மார்க்கெட் இழந்த நடிகை.. அவர் நடித்த அன்பே சிவன், வின்னர் படங்கள் வெளிவந்து 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எனவே, அக்கா, அம்மா கேரக்டர்களில் நடிக்கும் இடத்துக்கு வந்துவிட்டார்.

திருமணத்துக்கு பிறகு நடிகைகள் பிரகாசிப்பது குறைவுதான்.. பெண்களை மையமாக வைத்து படம் இயக்கக்கூடியவர்களும் இங்கு குறைவாகவே உள்ளது.. சம்பளமும் நடிகர்களைவிட நடிகைகளுக்கு மிகவும் குறைவுதான்.. நயன்தாரா, திரிஷா போன்று நாற்பது வயதை கடந்து, அதிக சம்பளம் பெறுபவர்கள் விதிவிலக்குதான்.

அந்தவகையில் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் ஒதுங்கி இன்ஸ்டாவில ஆக்டிவ்வாக இருப்பவர் கிரண்.. இப்போது சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு சென்றுள்ளார்.. கிரண் போலீசுக்கு சென்றுள்ளதால், அவரது புரமோஷனுக்காக இவ்வாறு செய்கிறாரா? என்றும் சிலர் கேட்கிறார்கள். புரமோஷன் தேவையென்றால், சட்ட நடவடிக்கையை யாரும் நாட மாட்டார்கள்..

மத்திய மாநில அரசு

சோஷியல் மீடியாவில் தற்போது நிறைய கிரைம்கள் நடக்கின்றன.. நாமே விரும்பாமல், எதிர்பாராதபோது, ஆபாச வீடியோக்கள் செல்போனில் திடீரென வருகின்றன.. இதை அனுப்புவது யார்? எப்படி அந்த வீடியோக்களை தடை செய்வது? இதை கண்டுபிடிக்கவே முடிவதில்லை.. எனவே, சைபர் கிரைம் குற்றங்களை வெகுவாக களைவதற்கு பெரிய அளவிலான டீம்களை மத்திய மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். சைபர் கிரைமுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கிரண் ஒரு பிரபல நடிகை என்பதால் , அவருக்கு பிரச்சனைகள் குறைவு. ஆனால், இதே டார்ச்சர், சாதாரண பெண்களுக்கு வந்தால்? விவாகரத்து வரை செல்லவும் வாய்ப்புள்ளது. கிரண், தனியாகவே ஒரு செயலியை உருவாக்கி, அதில் சேட்டிங் செய்து பணம் வசூலிக்கிறார் என்றால், அது அவருடைய தன்னுடைய வருமானத்துக்காக விருப்பப்பட்டு செய்வதாகும். கிரணுடன் சேட்டிங் செய்துவிடுவதாலேயே, அவரது வீடியோவை வைத்து என்ன வேணும்னாலும் செய்யலாம் என்று நினைக்கலாமா?

ஆபாச எல்லைகள்

அதேசமயம், அப்படியொரு ஆபாச எல்லைக்கு கிரண் சென்றதுதான், இப்போதுள்ள பிரச்சனைக்கு காரணம்.. கிரணுக்கு 3 கல்யாணம் நடந்தது, 2 முறை விவாகரத்து நடந்தது, இதெல்லாம் பிரச்சனையில்லை. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.. அதை இந்த சோஷியல் மீடியா போட்டோ, வீடியோக்களுடன் தொடர்புபடுத்த முடியாது..

நடிகை என்றால் அவர்களுக்கு ஒழுக்கத்துக்கு மார்க் போடுவது, அவரை சரியில்லை என்று விமர்சிப்பதெல்லாம் அநாகரீகமானது, கேவலமானது. பிகினி டிரஸ் போடுவது எனக்கு பிடிக்கும் என்று ஓபனாகவே கிரண் சொல்கிறார்.. இப்படி சொல்வது ஆண்களுக்கு வசதியாக உள்ளது.. இதுஒரு ஆணாதிக்க சமுதாயம்.. பெண்களை பிடித்தால் தேவதை என்பார்கள், தங்களுக்கு பிடிக்காவிட்டால், ஒழுக்கம் கெட்டவள் என்று விமர்சிப்பார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+