பிரபல பாடகருடன் நெருக்கமாக நடித்து.. குஷ்பு ஓவர் ஆக்டிங்.. "கண்ணாடி கதவு"பாஜக: கேட்பது யார் பாருங்க
சென்னை: மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் பொறுப்பில் இருந்தவரை, தமிழக பாஜக ஒழுக்கமுள்ள கட்சியாக இருந்தது... தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், ஒழுக்கமுள்ள கட்சியாக கம்யூனிஸ்ட் போலவே, பாஜகவும் திகழ்ந்தது. ஆனால், ஒழுக்கமாக இருந்த அத்தனை தலைவர்களும், இன்று பாஜகவை விட்டு போய்விட்டார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருக்கிறார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "பல படங்களில், பல காட்சிகளில் ஆபாசமாக நடித்திருக்கிறார் குஷ்பு.. இதை பற்றி நாம் கேட்டால், அது தங்களது தொழில் என்பார்கள்.. பாடகர் ஹரிஹரனுடன் சேர்ந்து அசிங்கமாகதான் நடிச்சாங்களே? எல்லாருக்கும் அறிவுரை சொல்லும் இடத்தில் குஷ்பு இருந்தாலும், முதலில் தான் யார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

ஆதங்கம்: மாணவி விஷயத்தில் ஒரு வாரம் காலம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது வந்து ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாரே ஏன்? அந்த பொண்ணு மேல அவ்வளவு அக்கறை என்றால், முதல்நாளே கண்டன அறிக்கை விடவேண்டியதுதானே? போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அந்த மாணவியை இவங்கதான் அசிங்கப்படுத்திட்டு இருக்காங்க.
இன்று போராட்டம் செய்துதான் எதிர்ப்பை காட்ட வேண்டுமா? மணிப்பூர் பாலியல் விவகாரத்துக்கும் இப்படித்தான் அமைதியாக இருந்தாங்க.. இதெல்லாம் காட்சி அரசியல்.
விசாரணை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நீதி கிடைக்க, கோர்ட் இந்த விவகாரத்தில் நேரடியாக இறங்கியிருக்கிறது. மகளிர் ஆணையம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்., காவல்துறை விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இவைகள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டால், போராட்டம் செய்யலாம். இப்பவே எதுக்கு?
எதிர்க்கட்சி என்ற கடமைக்காக அதிமுக செய்தது.. அத்துடன் விலகிவிட்டது. ஆனால், இதை பாஜக மட்டும் அரசியலாக்க பார்க்கிறது. மாணவியின் தோழியும் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார். பிறகு, மாணவியைபோல இன்னும் பலர் அங்கு பாதிக்கப்பட்டதாக சொல்கிறார் குஷ்பு.. இதுக்கெல்லாம் அடிப்படை ஆதாரம் இருக்கா? எதையாவது கொளுத்தி போட்டால் எப்படி? அப்படியானால் இவர்களின் நோக்கம் என்ன? அண்ணா பல்கலைக்கழகத்தின் பாரம்பரத்தையே டேமேஜ் செய்வது போல பேசுகிறார் குஷ்பு.
கண்ணகி: கண்ணகிக்கும், மாணவி விவகாரத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? கண்ணகி பெயரை உச்சரிக்க, குஷ்புக்கு தகுதியும் கிடையாது, உரிமையும் கிடையாது. சிலம்புவை தொடவே கூடாது.
நீங்க சினிமாவில் ஆபாசமாக நடிக்கலியா? ஒருசில நடிகர், நடிகைகள் நடிக்கும் ஆபாச காட்சிகளால் பாலியல் தூண்டல்கள் ஏற்பட்டு, அதுவே இளைஞர்களிடம் பாலியல் சீண்டலாக மாறுகிறது. அந்த சில நடிகைகளின் லிஸ்ட்டில் குஷ்பும் உள்ளார். தொழில் என்றாலும் அதில் ஒரு நேர்மை வேணாமா? பணம் தந்தால் எப்படியும் நடிப்பீர்களா? கவர்ச்சி காட்சிகளில் நடித்தால் இளைஞர்கள் பாழாயிடுவாங்க என்று சொல்லி தவிர்த்திருக்க வேண்டியதுதானே? குஷ்பு யார் என்று மக்களுக்கு தெரியும்.. திருமணமாகாமலேயே பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்ளலாம் என்று சொன்னவர்தானே?
குஷ்புக்கு ஒரு அரசியல் தேவை.. தன்னை காட்டிக் கொள்ள ஒரு களம் தேவை. இன்று குஷ்புடன் இருந்தவர்களை பார்த்தால் கட்சிக்காரர்களை போலவே தெரியல. அப்பாவிகளாக தெரிகிறார்கள்.
கண்ணாடி கவு: "என் அலுவலகத்தில் கண்ணாடி கதவுகளாக மாற்றிவிட்டேன், குஷ்பு, காயத்ரி ரகுராம், பாஜக ஆபீசுக்கு வந்தால் உள்ளே என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிய வேண்டும்" என்று அன்று அண்ணாமலை ஏன் சொன்னார்? தன்னை நல்லவர் போலவும், குஷ்பு போன்றவர்களை கெட்டவர் போலவும் இருந்ததே அவரது பேச்சு? இதற்கு என்ன அர்த்தம்?
பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் அன்று இருந்தவரை, தமிழக பாஜக ஒழுக்கமுள்ள கட்சியாக இருந்தது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், ஒழுக்கமுள்ள கட்சியாக கம்யூனிஸ்ட் போலவே, பாஜகவும் திகழ்ந்தது. ஆனால், அன்று ஒழுக்கமாக இருந்த அத்தனை தலைவர்களும், இன்று பாஜகவை விட்டு போயிட்டாங்க..
ஆவேசம் : எந்த விஷயம் நடந்தாலும், அண்ணாமலை உடனே வந்து விசாரணை கேட்பாரே? கேடி ராகவன் வீடியோவை வெளியிட்டது யார்? இப்போ வரைக்கும் அது மர்மமா இருக்கே? எங்கே பாலியல் சம்பந்தமான விவகாரம் நடந்தாலும் அதை கேட்க பாஜகவுக்கு தகுதியே கிடையாது, அதேபோல சீமானுக்கும் தகுதி கிடையாது. அதிலும் குஷ்புவெல்லாம் இன்றைக்கு இவ்வளவு சீன் போடக்கூடாது. இதெல்லாம் ஓவர் ஆக்டிங்.." என்றெல்லாம் ஆவேசமாக பேசியிருக்கிறார் சேகுவேரா.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications