கனகா இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல.. நல்லா தானே இருந்தாங்க? நடிகை குட்டி பத்மினி வருத்தம்
சென்னை: நடிகை கனகாவை சில நாட்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி சந்தித்து அவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
பல நாட்களுக்குப் பிறகு நடிகை கனகாவை பார்த்ததும் ரசிகர்கள் என்ன இவர் இப்படி மாறிவிட்டார் என்று அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த அளவிற்கு உடல் எடை அதிகரித்து கனகா உருவம் மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னிடம் நேரில் பேசும் போது நல்லபடியாக பேசிய கனகா இப்போது மாறிவிட்டார் என்று நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் நடிகர் ரஜினி, விஜயகாந்த், ராமராஜன் என்று பல டாப் ஹீரோகளுடன் நடித்து பிரபலமான நடிகை கனகா 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர். அதோடு இவர் மறைந்த நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவருடைய திருமண வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியவில்லை.
அதோடு சில வருடங்களாகவே கனகா என்ன ஆனார் என்பது பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது. அதுபோல சில வருடங்களுக்கு முன்பு கனகா இறந்துவிட்டார் என்றெல்லாம் வதந்தி பரவி வந்தது. அதற்கு பிறகு ஒரு முறை கனகாவின் வீட்டில் தீப்பிடித்து எரிந்த போதும் கனகா தனிமையில் வசித்து வருவதும் அனைவருக்கும் தெரிய வந்தது. அதோடு கனகாவிற்கு அவருடைய அப்பாவுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சனை, கை கூடாத காதல், கைவிட்ட கணவர் என பல வருடங்களாக கனகா வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் பல துயரங்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர்கள் கனகாவிற்கு என்ன ஆனது என்று அவரோடு நடித்த பல நடிகர்களிடமும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். சில மாதங்களுக்கும் முன்பு கூட கனகாவை திரையில் அறிமுகப்படுத்திய கங்கை அமரனிடம் ரசிகர்கள் அதிகமானோர் கனகா என்ன ஆனார் என்று ஏதாவது உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி கேட்டிருந்தனர். அது குறித்து கங்கை அமரன் என்னை கொரியரில் கனகா வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுங்கள் என்று கூட சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி கனகாவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கனகா என்னிடம் நன்றாக பேசினார். அவருடைய வாழ்க்கை குறித்து சில அறிவுரைகளை கூறினேன். அதோடு என்னுடைய சேனலில் ரசிகர்களுக்காக இன்டர்வியூ கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டார் என்று பேசியிருந்தார்.
அதனால் அதிகமான ரசிகர்கள் குட்டி பத்மினியிடம் கனகாவை எப்போது இன்டர்வியூ எடுப்பீங்க என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கனகாவை குறித்து இப்போது மீண்டும் குட்டி பத்மினி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் கனகாவை சந்தித்தபோது அவரிடம் வாட்ஸ் அப் கூட கிடையாது. அதற்கு பிறகு தான் நான் அவருடைய மொபைலில் வாட்ஸ் அப்பை இன்ஸ்டாலே செய்தேன்.
அப்போது ரசிகர்கள் உன்னை ரொம்பவே தேடுகிறார்கள். நீ ஒரு பேட்டி தர வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அதற்கு கனகாவும் சரி என்று சொல்லி இருந்தார். ஆனால் இப்போது பேட்டியளிப்பது தொடர்பாக கனகாவிற்கு போன் செய்தால் கனகா எந்த காலையும் எடுக்கவில்லை அதோடு அவருக்கு நிறைய மெசேஜ் அனுப்பினேன். அதற்கும் அவர் ரிப்ளை செய்யவில்லை. நான் கனகாவோடு பேசுவதற்காக ஒரு காபி ஷாப்க்கு தான் போயிருந்தோம்.

கனகா வீட்டிற்கு கூட என்னை வாங்கனு கூப்பிடவில்லை. கனகா யாரையுமே சந்திக்க தயாராக இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்து விட்டது. அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டது மகிழ்ச்சியாக பேசிவிட்டு சென்றார். அந்த நினைவு போதும், அவருக்கு தனிமை தான் ரொம்ப பிடிச்சிருக்கு. இனி யாரிடமாவது பழகினால் ஏமாந்துவிடுமோ விடுவோமோ என்று பயப்படுகிறாரோ என்று தெரியவில்லை.
ஆனால் கனகாவிற்கு தேவையான உதவிகளை நான் செய்ய தயாராக இருக்கிறேன். அவர் ஒத்துழைத்தால் தான் என்னால் அவருக்கு உதவ முடியும். அவரை பேட்டி எடுக்காமல் போனது நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என்று அந்த பேட்டியில் குட்டி பத்மினி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications